Connect with us

Cinema News

வரீங்களா? இல்லையா? விஷால் செய்வது மட்டுமல்ல சொல்றதை கூட குழப்பிவிடுறாரே?

Vishal: கோலிவுட்டில் இருக்கும் நடிகர்கள் அரசியல் எண்ட்ரி புது டிரெண்டாகி விட்டது போல. விஜய் அரசியலுக்கு வர இருப்பதாக தொடர்ந்து பேச்சுகள் எழுந்த நிலையில் சமீபத்தில் அவரின் கட்சி பெயரை அறிவித்து விரைவில் நடிப்பில் இருந்து விலகுவதாக அறிவித்தார்.

இந்நிலையில் நடிகர் விஷால் கட்சி தொடங்க இருப்பதாக ஒரு திடீர் பரபரப்பு எழுந்தது. அந்தவகையில் விஷாலின் கட்சி பெயர் இன்று அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்டது. எதிர்பார்த்த போல ஒரு அறிவிப்பை விஷால் தரப்பில் வெளியிட்டு இருக்கிறார்கள். 

அதிலிருந்து, சமூகத்தில் எனக்கு இத்தனை ஆண்டுகளாக ஒரு நடிகனாக சமூக சேவகனாக உங்களில் ஒருவனாக அந்தஸ்தும் அங்கீகாரமும் அளித்த தமிழக மக்களுக்கு என்றென்றும் கடமைப்பட்டுள்ளேன். என்னால் முடிந்த உதவிகளை செய்ய வேண்டும் என்ற நோக்கத்தில் ஆரம்ப காலத்தில் இருந்தே என்னுடைய ரசிகர் மன்றத்தை ஒரு சராசரி மன்றமாய் கருதாமல் மக்களுக்கு நன்மை செய்ய வேண்டும் என எண்ணினேன்.

இதையும் படிங்க: கும்பலா உட்கார்ந்து கள்ளக்காதல் பத்தி பேசும் பிக் பாஸ் டீம்!.. அன்பு கேங் அம்மாவை காணோமே?

”இயன்றதை செய்வோம் இல்லாதவர்களுக்கு” என்ற நோக்கத்தில் நற்பணி இயக்கமாக செயல்படுத்தினோம். அடுத்த கட்டமாக மக்களின் முன்னேற்றத்திற்காக மக்கள் நல இயக்கத்தை உருவாக்கி மாவட்டம், தொகுதி, கிளை வாரியாக மக்கள் பணி செய்வதுடன் என் தாயார் பெயரில் இயங்கும் தேவி அறக்கட்டளை மூலம் அனைவரும் கல்வி கற்க மறைந்த முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் அவர்களின் பெயரில் வருடந்தோறும் பல எண்ணற்ற ஏழை எளிய மாணவ, மாணவியர்களை படிக்க உதவி வருகிறோம். 

நான் எப்போதும் அரசியல் ஆதாயத்தை எதிர்பார்த்து மக்கள் பணி செய்தது இல்லை. நன்றி மறப்பது நன்றன்று என்ற வள்ளுவனின் வாக்குப்படி என்னால் முடிந்த உதவிகளை நான் செய்துக்கொண்டே தான் இருப்பேன். அது என் கடமை என்று நான் மனரீதியாக கருதுகிறேன். தற்போது மக்கள் நல இயக்கத்தின் மூலம் நான் செய்து வரும் மக்கள் பணிகளை தொடர்ந்து செய்வேன்.

வரும் காலத்தில் இயற்கை வேறு ஏதேனும் முடிவு எடுக்க வைத்தால் அப்போது மக்களுக்காக மக்களின் ஒருவனாக குரல் கொடுக்க தயங்க மாட்டேன் என்றும் தெரிவித்து இருக்கிறார். இப்போ தான் இல்லையாம் என ரசிகர்களும் கமெண்ட் தட்டி வருவது குறிப்பிடத்தக்கது. ஜெயலலிதா மறைந்த பின்னர் அவர் தொகுதியான ஆர்.கே.நகர் தேர்தலில் விஷாலும் போட்டியிட மனு செய்து இருந்தார். ஆனால் அதில் தவறு ஏற்பட்டு மனு தள்ளுப்படி செய்யப்பட்டதும் குறிப்பிடத்தக்கது. 

இதையும் படிங்க: நாலா பக்கமும் ரோகினியை சுற்றி வளைத்த பிரச்னை… இப்பையாது மாட்டி விடுங்களேன்பா!

author avatar
Shamily
ஊடகத்துறை பட்டதாரியான இவர் 5 ஆண்டுகளாக பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, அரசியல்,வணிகம் மற்றும் லைப் ஸ்டைல் கட்டுரைகளை வழங்கி வந்தார். தற்போது கடந்த 4 ஆண்டுகளாக சினி ரிப்போர்டஸ் தளத்தில் உதவி ஆசிரியராக பணியாற்றி வருகிறார்.
Continue Reading

More in Cinema News

To Top