Cinema History
எம்ஜிஆரை முதல்வராக்கியதே அந்த இரண்டு பாடல்கள்தான்… பிரபலம் சொன்ன தகவல்!..
எம்ஜிஆர் ஆட்சிக்காலத்தில் அரசவைக் கவிஞராக இருந்தவர் கவிஞர் முத்துலிங்கம். இவர் எம்ஜிஆருக்காக எழுதிய அந்த 2 பாடல்கள் தான் அவரை முதல்வராக்கின என்று சொல்கிறார். இதுபற்றி அவரே ஒரு பேட்டியில் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
மக்கள் திலகம் எம்ஜிஆருக்கு மிக மிக நெருக்கமாக இருந்த கவிஞர் முத்துலிங்கம். எம்ஜிஆர் படத்துல முதல் பாட்டு நான் எழுதியதுன்னா அது உழைக்கும் கரங்கள் படத்துல கந்தனுக்கு மாலையிட்டால் தான். ஊருக்கு உழைப்பவன் படத்திற்காக பிள்ளைத்தமிழ் பாடுகிறேன் என்று ஒரு பாடல் வரும். அதைக் கவிஞர் எழுதும்போது தான் அவர் குடும்பத்தை விட்டு கோபத்தில் பிரிந்து வந்ததைக் கேள்விப்பட்ட எம்ஜிஆர் மீண்டும் நீ குடும்பத்தோடு வந்தால் தான் பாடல் தருவேன் என்று சொன்னாராம்.
மீனவநண்பன் படத்துல எல்லா பாடல்களும் முடிந்தது. இருந்தாலும் முத்துலிங்கத்தை வைத்து பாடல் எழுத வேண்டும் என்று சொன்னோமே… தன்னை நம்பி இருப்பவர்களை ஒரு போதும் கைவிடக்கூடாது என்றும் அவருக்காக ஒரு பாடலைக் கொடுத்தாராம் புரட்சித்தலைவர். அதுதான் மனிதாபிமானம். அது வேறு எந்த நடிகரிடமும் கிடையாது என்கிறார் கவிஞர் முத்துலிங்கம். அதுதான் பாடகர் கே.ஜே.யேசுதாஸ், வாணி ஜெயராம் பாடிய தங்கத்தில் முகமெடுத்து என்ற பாடல்.
இன்று போல் என்றும் வாழ்க படத்தில் அன்புக்கு நான் அடிமை, கொண்ட கொள்கைக்கு நான் அடிமை, தொண்டர் கூட்டத்தில் நான் அடிமை என்ற பாடல். அது போல இது நாட்டைக் காக்கும் கை, ஒரு வீட்டைக் காக்கும் கை, இந்த கை நாட்டின் நம்பிக்கை, எதிர்கால தாயகத்தின் வாழ்க்கை என்று 2 பாடல்களை எழுதினேன்.
1977ல் வெளிவந்த பொதுத்தேர்தலுக்கு இந்த 2 பாடல்களும் தான் பிரச்சாரத்திற்குப் பெரிதும் பயன்பட்டது. எம்ஜிஆரும் ஜெயித்து ஆட்சிக்கு வந்தது. ஜெயித்ததும் அமெரிக்காவில் உள்ள வாஷிங்டன் என்ற பத்திரிகை இந்த 2 பாடல்களையும் குறிப்பிட்டு இதைப் போல சிறந்த கருத்துள்ள கவிஞர்கள் எழுதிய பாடல்களைப் பாடி மக்களைக் கவர்ந்து எம்ஜிஆர் ஆட்சிக்கு வந்தார் என்று எழுதியிருந்தாங்க. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.