Connect with us

Cinema News

இங்க ஜெயிக்கிறதை விட நிக்கிறது கஷ்டம்!.. புகழுக்கு மேடையிலேயே அட்வைஸ் பண்ண சூரி!..

மாதவனை வைத்து என்னவளே, மம்முட்டி நடித்த ஜூனியர் சீனியர் போன்ற படங்களை இயக்கிய இயக்குனர் சுரேஷ் பல வருடங்களுக்குப் பிறகு விஜய் டிவி புகழை வைத்து நல்ல படம் தான் மிஸ்டர் ஜு கீப்பர்.

யுவன் சங்கர் ராஜா இசையில் உருவாகியுள்ள அந்த படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று நடைபெற்றது. அதில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட நடிகர் சூரி மேடையில் ரொம்பவே சீரியசாக பேசியது பலரையும் வியப்பில் ஆழ்த்தியது.

இதையும் படிங்க: மகள்களை பல வருடம் மறைத்து வைத்த ரஜினிகாந்த்!… மண்டோதரி முதல் ரஜினியை சீண்டிய ரகசியங்கள் வரை…

காமெடி நடிகராக வலம் வந்த சூரி தற்போது கதையின் நாயகனாக மாறியுள்ள நிலையில், வரிசையாக பல படங்களில் ஹீரோவாக நடித்து வருகிறார். சமீபத்தில் நடைபெற்ற ரோட்டர்டேம் சர்வதேச திரைப்பட விழாவில் கலந்து கொண்ட சூரி ஏழுகடல் ஏழுமலை மற்றும் விடுதலை 1 மற்றும் 2 உள்ளிட்ட படங்கள் அங்கே திரையிடப்பட்டன.

அடுத்து கொட்டுக்காளி, கருடன் உள்ளிட்ட படங்கள் சூரி நடிப்பில் உருவாகி வருகிறது. தம்பி புகழ் அழைத்ததற்காக இந்த நிகழ்ச்சிக்கு வந்தேன். என்னை போலவே அவனும் சினிமாவில் சேர்வதற்கு முன் ஹோட்டலில் எச்சில் இலை எல்லாம் எடுத்து ரொம்பவே கஷ்டப்பட்டு வந்தவன். நல்ல திறமைசாலி. என்னுடன் 2 படங்களில் வேலை செய்துள்ளார். எப்போதுமே சிரிக்க வைத்துக் கொண்டே இருப்பான் என்றார்.

இதையும் படிங்க: ஏலியனை நம்பி ஏமாந்துப் போன சிவகார்த்திகேயன்!.. அனுமானை நம்பி அஜித் வசூலையே வீழ்த்திய இளம் ஹீரோ!..

மேலும், இங்கே ஜெயிக்கிறது முக்கியம் அதை விட நிலைக்கிறது கஷ்டம் என சூரி திடீரென சீரியஸாக புகழுக்கு அட்வைஸும் வழங்கி உள்ளார். தொடர்ந்து நல்ல படங்களை ரசிகர்களுக்காக கொடுக்க வேண்டும். நல்ல கதைகளை கேட்டு நடிக்க வேண்டும் என்று சூரி தனக்கு கிடைத்த அனுபவங்களை மேடையில் பகிர்ந்து கொண்டார்.

 

author avatar
Saranya M
Continue Reading

More in Cinema News

To Top