Cinema News
தமிழ்ல பேயோட்டம் ஓடிய கமல் படம்.. அதை விட தெலுங்கில் சூப்பர் டூப்பர் ஹிட்! அதுக்கு காரணமே இதுதானாம்
Actor Kamalhasan: தமிழ் சினிமாவில் சாதனை படைத்த பல நடிகர்கள் இருக்கலாம். ஆனால் அவர்கள் இருந்த காலத்தில் நாம் இல்லையே என சில பேருக்கு வருத்தம் இருக்கும். அதுவும் இப்போது இருக்கும் இளம் தலைமுறை நடிகர்கள் கொடுத்து வைத்தவர்கள் என்றுதான் சொல்ல வேண்டும்.
ஏனெனில் கமல், ரஜினி என பெரிய உச்சம் தொட்ட நடிகர்கள் இருக்கும் இந்த காலத்தில் இளம் தலைமுறை நடிகர்களும் பயணப்படுவது அவர்களுக்குண்டான அதிர்ஷ்டம் என்றே சொல்ல வேண்டும். அதிலும் குறிப்பாக கமல் சினிமாவிற்காக புதுபுது ஐடியாக்களை கொடுத்துக் கொண்டே வருபவர்.
இதையும் படிங்க: தலைவர் என்ட்ரி செம மாஸ்!.. அசத்தல் வசனங்கள்!.. லால் சலாம் டிவிட்டர் விமர்சனம்…
சினிமாவை பற்றிய ஆராய்ச்சி என்றே சொல்லலாம். அது கமலிடம் பொதிந்து கிடக்கிறது. அவர் நடித்த ஒவ்வொரு படங்களுமே ஒரு ஆராய்ச்சி என்றுதான் சொல்ல வேண்டும். அது செண்டிமெண்ட் படங்களாகட்டும். காமெடி படங்களாகட்டும். ஆக்ஷன் படங்களாகட்டும். எல்லாவற்றிலும் ஒரு தனித்துவம் இருக்கத்தான் செய்யும்.
கமல் நடித்த படங்களிலேயே என்றுமே மறக்க முடியாத படம் என்று ஏராளமான படங்கள் இருக்கலாம். ஆனால் அதில் பஞ்சதந்திரம் படத்தை ஒரு பொக்கிஷம் என்றே கருதலாம். கே.எஸ்.ரவிக்குமார் இயக்கத்தில் கமல், சிம்ரன், ரம்யா கிருஷ்ணன், நாகேஷ், ரமேஷ் அரவிந்த், ஜெயராம், ஸ்ரீமன், சங்கவி, ஊர்வசி, ஐஸ்வர்யா போன்ற பல முக்கிய நடிகர்கள் நடித்து வெளியான சூப்பர் ஹிட் படம்.
இதையும் படிங்க: ஆர்வம் காட்டாத ரசிகர்கள்!.. காத்து வாங்கும் தியேட்டர்கள்.. கல்லா கட்டுமா லால் சலாம்?!..
இந்தப் படத்தை அப்படியே தெலுங்கில் டப் செய்து வெளியிட்டவர் எடிட்டர் மோகன். அதாவது ஜெயம் ரவியின் தந்தை. தமிழை விட தெலுங்கில் மிக நன்றாக போனது என எடிட்டர் மோகன் கூறினார். அதற்கு காரணம் தெலுங்கில் டப் செய்யும் போது கமலை தவிற தமிழில் அந்தப் படத்தில் நடித்த அதே நடிகர்களை வைத்துதான் தெலுங்கில் டப்பிங் பேச வைத்தாராம் மோகன்.
அப்போ கமலுக்கு யாரை பேச வைத்தால் நன்றாக இருக்கும் என யோசித்த போது ஒரு நடிகரை அழைத்து பேச வைத்திருக்கிறார். ஆனால் அந்த நடிகர் படு வேகமாக பேச மோகன் ‘எங்க அவசரமாக போறீங்க? எனக்கு பொறுமையாகவும் நிதானமாகவும் பேச வேண்டும்’ என சொல்ல அந்த நடிகர் கோபித்துக் கொண்டு போய்விட்டாராம்.
இதையும் படிங்க: தன்னை நடிகராக்க பாடுப்பட்ட நண்பன்… அவரை கௌரவித்து அழகு பார்த்த ரஜினிகாந்த்… என்ன நடந்தது தெரியுமா?
அதன் பிறகு எஸ்.பி. பாலசுப்பிரமணியம்தான் கமல் கேரக்டருக்கு டப்பிங் பேசியிருக்கிறார். அதனால்தான் தமிழை விட தெலுங்கில் பஞ்ச தந்திரம் படம் சூப்பர் டூப்பர் ஹிட்டானது என்று எடிட்டர் மோகன் கூறினார்.