பால்காரராக இருந்து முதல் ஜேம்ஸ்பாண்டு நடிகர் ஆனவர்… அட ஆச்சர்ய தகவல்!..

Published on: February 11, 2024
Shan kanari
---Advertisement---

ஹாலிவுட் படங்களில் ஜேம்ஸ்பாண்டு 007 படங்கள் என்றாலே ஒரு ஈர்ப்பு வந்து விடும். அவரது படங்களில் கிளுகிளுப்புக்கும் பஞ்சமிருக்காது. வெவ்வேறு காலகட்டங்களில் ஜேம்ஸ்பாண்டாக நடிக்கும் நடிகர்கள் மாறிக்கொண்டே இருப்பார்கள். அந்த வகையில் ஷான் கானரியும் ஜேம்ஸ்பாண்டாக நடித்துக் கலக்கியுள்ளார். ஆஜானுபாகுவான உடற்கட்டு, கம்பீரமான குரல் இவை தான் இவரை ஜேம்ஸ்பாண்டாக உருமாற்றின.

7 படங்களில் ஜேம்ஸ்பாண்டாக நடித்துக் கலக்கியுள்ளார். இவர் படங்களில் நடிக்க வருவதற்கு முன்னர் ஆரம்பத்தில் செய்த வேலை என்னன்னு தெரியுமா?

1930ல் ஸ்காட்லாந்துவில் ரப்பர் தொழிற்சாலை ஒன்றில் இவரது தந்தை தினக்கூலியாக வேலை பார்த்தார். இவரது தாயோ வீட்டு வேலை செய்யும் ஒரு பணிப்பெண். ஷான் கானரி குடும்ப வறுமை காரணமாக தனது 9வது வயதிலேயே பால்காரராக வேலை பார்த்தாராம்.

Sean Connery
Sean Connery

இவர் பள்ளி செல்லும் முன் வீடு வீடாகச் சென்று பால் கொடுப்பாராம். வறுமையின் கோரப்பிடி தாங்காமல் தனது 13வது வயதிலேயே முழுநேரப் பால்காரர் ஆனாராம். அதன் பிறகு 2ம் உலகப்போர் நேரத்தில் இங்கிலாந்து கப்பற்படையில் சேர்ந்துள்ளார். 19வது வயதில் அங்கிருந்து வெளியேறுகிறார்.

மீண்டும் வறுமை… சவப்பெட்டி தயாரிக்கும் நிறுவனத்தில் வேலை… என வாழ்க்கை உருண்டோடுகிறது. இதற்கிடையே கால்பந்தாட்டம், உடற்பயிற்சி என செய்து தனது உடலையும் பராமரிக்கிறார். இதுதான் அவரை சினிமா உலகிற்கு அழைத்து வந்தது. 1953ல் லண்டன் மிஸ்டர் யுனிவர்ஸ் போட்டியில் பங்கேற்ற இவருக்கு உயரமான மனிதர் பிரிவில் 3வது இடம் கிடைத்ததாம். இவர் ஆறடி உயரம் கொண்டவர்.

1959ல் டார்ஸான்ஸ் கிரேட்டஸ்ட் அட்வென்சர்ஸ் படத்தில் வில்லனாக நடித்தார். இவருக்கு ஸ்க்ரீன் டெஸ்ட் எதுவுமே எடுக்கவில்லையாம். முதல் ஜேம்ஸ்பாண்ட் படமான டாக்டர் நோ, இவரை முத்தமிட்டு வரவேற்றது. உலகம் முழுவதும் பிரபலமானார் ஷான் கானரி. தொர்ந்து ப்ரம் ரஷ்யா வித் லவ், யு ஒன்லி லிவ் ட்வைஸ், தண்டர்பால், கோல்டு பிங்கர் என 5 ஜேம்ஸ்பாண்டு படங்களில் நடித்தார். தொடர்ந்து டைமண்ட்ஸ் ஆர் பாரெவர் படத்தில் நடித்தார். நெவர் சே நெவர் அகைன் படத்திலும் நடித்தார்.

sankaran v

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.