தமிழ் சினிமா உலகில் மீண்டும் கம்பேக் கொடுப்பாரா பாவனா?.. பிரபலம் சொல்லும் தகவல்

Published on: February 11, 2024
bhavana
---Advertisement---

சித்திரம் பேசுதடி படத்தில் இருந்து நடிகை பாவனா தமிழ்த்திரை உலகில் பிரபலமானார். அதன்பிறகு தொடர்ந்து பல படங்கள் அவருக்கு வருகிறது. எழில் இயக்கத்தில் லிங்குசாமி தயாரிப்பில் தீபாவளி என்ற படத்தில் ஜெயம்ரவியுடன் இணைந்து பாவனா நடிக்கிறார். இதற்கிடையில் ஸ்ரீகாந்த் உடன் கிழக்கு கடற்கரை சாலை படத்தில் நடித்தார். அஜீத்துடன் சரண் இயக்கத்தில் அசல் படத்தில் பாவனா நடித்தார்.

மலையாள வாடையே இல்லாமல் சரளமாக தமிழ் பேசும் நடிகை பாவனா. அதற்குக் காரணம் அவரது வீட்டிலும் தமிழ், மலையாளம் பேசுவார்களாம். அசலுக்குப் பிறகு பட வாய்ப்புகள் வரவில்லை.

விஜய் உடன் புதிய கீதை படத்தில் பாவனா தான் நடிப்பதாக இருந்ததாம். ஆனால் கால்சீட் பிரச்சனை. ரஜினி, கமல், மணிரத்னம் படங்களில் நடிக்க ஆசையாம். பெரிய ஸ்டார் ஹீரோக்களுடன் நடிக்கவில்லையே என்ற வருத்தமும் பாவனாவுக்கு இருந்ததாம். பாவனா பாலியல் பலாத்காரத்தால் ரொம்பவே மனமுடைந்து இருந்தாராம்.

காரில் கொண்டு போய் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளானார். இதை பாவனா விவரித்த விதம் ரொம்பவே வருத்தம் தரக்கூடியது. நடிகைன்னா என்ன வேணாலும் கிள்ளுக்கீரையா நினைச்சிடலாமா? சினிமாவில் இந்த மாதிரியான காட்சிகள் எல்லாம் நடிச்சிருந்தேன்.

CP
CP

அப்போ டைரக்டர் சொல்வாரு. சுற்றி லைட்மேன்கள், அசிஸ்டண்ட் டைரக்டர்ஸ் இருப்பாங்க. அது ஒரு காட்சியா தான் தெரியும். ஆனா ஒரு சினிமால அந்தக் காட்சியைப் பார்க்குற ஆடியன்ஸ் எப்படி பயத்தோட இருப்பாங்களோ அதைத் தாண்டி ஒரு பயத்தை எனக்குக் கொண்டு வந்தது அந்த சம்பவம் தான். அதை மேற்கொண்டு நான் பேச விரும்பல. அதிலிருந்து மீள பல காலம் ஆகும் என்றார் பாவனா.

அவருக்கான ரீ என்ட்ரி பெரிய இயக்குனர்கள் கிடைத்தால் நடிப்பதற்கு வாய்ப்பு இருக்கிறது. மேற்கண்ட தகவலை பிரபல சினிமா விமர்சகர் செய்யாறு பாலு தெரிவித்துள்ளார்.

பாவனாவின் பலாத்கார வழக்கில் பிரபல மலையாள பட உலக முன்னணி நடிகர் திலீப் தான் சதித்திட்டம் தீட்டியதாகவும், அவர் மீது கைது நடவடிக்கை எடுக்கப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.

sankaran v

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.