அடுத்த ராஜமவுலி நான்தான்டா!.. மார்க்கெட் போன பின்னாடி மகாபாரதம் எடுக்கும் லிங்குசாமி!…

Published on: February 13, 2024
lingusamy
---Advertisement---

Lingusamy: ஆனந்தம் திரைப்படம் மூலம் கோலிவுட்டில் இயக்குனராக அறிமுகமானவர் லிங்குசாமி. விக்ரமன் போல இவரும் ஃபீல் குட் படங்களை எடுப்பார் போல என ரசிகர்கள் நினைத்த நிலையில் அடுத்து ரன் எனும் ஆக்‌ஷன் படத்தை எடுத்து ஆச்சர்யத்தை கொடுத்தார். அதன்பின் ஆக்‌ஷன் படங்களே அவரின் ஸ்டைலாக மாறிப்போனது.

கார்த்தியை வைத்து அவர் எடுத்த பையா படமும் சூப்பர் ஹிட் அடித்தது. விஷாலை வைத்து அவர் இயக்கிய சண்டக்கோழி திரைப்படம் விஷாலுக்கு மிகப்பெரிய வெற்றிப்படத்தை கொடுத்தது. அதேநேரம் அதன்பின் லிங்குசாமி இயக்கிய படங்கள் வெற்றியை பெறவில்லை. அஜித்தை வைத்து ஜி எனும் படத்தை இயக்கினார். விக்ரமை வைத்து பீமா, ஆர்யாவை வைத்து வேட்டை என அவர் எடுத்த படங்கள் ஓடவில்லை.

இதையும் படிங்க: வெற்றித்துரைசாமிக்கும் அஜித்துக்கும் அப்படி என்ன நெருக்கம்? ஓடோடி வந்ததன் காரணம்

அதேபோல், சூர்யாவை பாட்ஷா ரஜினி ரேஞ்சுக்கு சித்தரித்து அவர் எடுத்த அஞ்சான் படம் ரசிகர்களின் ட்ரோலுக்கு ஆளானது. அப்படத்திற்கு பின் 4 வருடங்கள் கழித்து மீண்டும் விஷாலை வைத்து சண்டக்கோழி 2 படத்தை எடுத்தார் லிங்குசாமி. ஆனால், அந்த படமும் ஊத்திக்கொண்டது.

தொடர்ந்து தோல்விப்படங்களை கொடுத்ததால் பெரிய நடிகர்கள் யாரும் லிங்குசாமிக்கு கால்ஷீட் கொடுக்கவில்லை. எனவே, ஆந்திரா பக்கம் போய் ராம் பொத்தினேனியை வைத்து வாரியர் என்கிற படத்தை இயக்கினார். இந்த படம் தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளிலும் வெளியாகி சூப்பர் பிளாப் ஆனது.

இதையும் படிங்க: இந்த படத்தை வச்சி விஜயை தூக்கணும்!.. காலம் போன காலத்துல கணக்கு போடும் விஷால்!..

என்னடா கால் வைக்குற இடமெல்லாம் கண்ணி வெடியா இருக்கேன்னு பல மாதங்கள் இயக்கம் பற்றி யோசிக்காமல் இருந்த லிங்குசாமி இப்போது ஒரு புதிய படத்தை இயக்கவிருக்கிறார். எப்போது எடுத்தாலும் ரசிகர்களிடம் வரவேற்பை பெறும் மகாபாரத கதையை கையில் எடுத்திருக்கிறார்.

இந்த கதையை ராஜமவுலி போல பிரம்மாண்ட செலவில் எடுக்கவிருக்கிறாராம் லிங்குசாமி. அனேகமாக ஹிந்தியிலிருந்து ஒரு தயாரிப்பாளரை பிடித்திருப்பார் என சொல்லப்படுகிறது. சில புரமோ வீடியோக்களை எடுத்து தயாரிப்பாளர் தரப்புக்கு அனுப்பி இருக்கிறாராம். எல்லாம் ஓகே ஆனால், படம் டேக் ஆப் ஆகும் என சொல்லப்படுகிறது. மகாபாரத கதையில் என்ன பலன் எனில் பல மொழிகளிலும் இப்படத்தை வெளியிட்டு கல்லா கட்டலாம். அதனால், இந்தமுறை எப்படியும் ஹிட் கொடுத்து விடுவது என்பதில் லிங்குசாமி உறுதியாக இருக்கிறாராம்.

சிவா

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.