இந்த படத்தை வச்சி விஜயை தூக்கணும்!.. காலம் போன காலத்துல கணக்கு போடும் விஷால்!..
Actor Vishal: தமிழ் சினிமாவின் புரட்சித்தளபதி விஷால். செல்லமே படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான விஷால் ஆரம்பத்தில் அர்ஜூனுக்கு உதவி இயக்குனராக பணிபுரிந்திருக்கிறார். அர்ஜூன் மூலமாகத்தான் சினிமாவில் ஹீரோவாக அறிமுகமானார் விஷால்.
முதல் படமே வெற்றிப்படமாக அமைய கோலிவுட்டில் ஒரு தவிர்க்க முடியாத நடிகராக மாறி இன்று நடிகர் சங்கத்தில் முக்கிய பொறுப்பிலும் இருக்கிறார். நடிப்பு மட்டுமில்லாமல் அரசியல் பார்வை அதிகம் கொண்ட நடிகராகவும் விஷால் இருக்கிறார்.
இதையும் படிங்க: உனக்கு ஒன்னுன்னா நான் இறங்கி வருவேன்டா!… வெற்றி துரைசாமி அஞ்சலி செலுத்த வந்த அஜித்..
சமூக அக்கறை கொண்டவராகவும் விஷால் திகழ்கிறார். சமூகத்தில் நடக்கும் பிரச்சினைகளை அவ்வப்போது தட்டிக் கேட்டும் வருகிறார். விஜயைத் தொடர்ந்து விஷாலும் அரசியலுக்கு வருவாரா? என்ற கேள்வியும் மக்கள் மத்தியில் இருந்து வருகிறது.
ஏனெனில் சமீபத்தில் அவர் அறிவித்த அறிக்கை அப்படி. இந்த நிலையில் விஷால் தற்போது துப்பறிவாளன் 2 படத்தில் கவனம் செலுத்தி வருகிறார். அவரின் நடிப்பில் கடைசியாக வெளியான படம் ‘மார்க் ஆண்டனி’. யாரும் எதிர்பாராத ஒரு மாபெரும் வெற்றியை கொடுத்த படம் மார்க் ஆண்டனி.
இதையும் படிங்க: இப்படி ஒரு டைட்டில் வச்சதால எனக்கு நேர்ந்த கொடுமை! அர்ஜூன் சொன்ன அந்தப் படம் எதுனு தெரியுமா?
அந்த வெற்றியை தொடர்ந்து அடுத்தடுத்து விஷால் ஏராளமான படங்களில் நடிப்பார் என்று பார்த்தால் படத்தை இயக்குவதில் குறிக்கோளாக இருக்கிறார். அதற்கு காரணம் விஜய் என்று சொல்லப்படுகிறது. துப்பறிவாளன் 2 படத்தை மிகப்பெரிய அளவில் வெற்றியடைய செய்து தான் ஒரு சிறந்த இயக்குனர் என நிரூபித்து எப்படியாவது விஜயை வைத்து ஒரு படம் இயக்க வேண்டும் என்ற முனைப்பிலேயே அந்தப் படத்தை எடுத்துக் கொண்டிருக்கிறாராம் விஷால்.
ஆனால் இதையெல்லாம் செய்வதற்கு முன் விஜயின் அறிக்கையை விஷால் பார்த்தாரா என தெரியவில்லை. அந்த அறிக்கையில் தெள்ளத்தெளிவாக விஜய் இனி படங்களில் நடிக்க போவதில்லை என உறுதிபட கூறியிருக்கிறார். அப்படி இருக்கும் போது விஜயை எப்படி விஷால் இயக்குவார் என்பது சந்தேகம்தான்.
இதையும் படிங்க: வாலிக்காக வரிகளை மாற்ற சொன்ன எம்.ஜி.ஆர்!.. கடுப்பாகி கத்திய கண்ணதாசன்!.. நடந்தது இதுதான்!..