வாலிக்காக வரிகளை மாற்ற சொன்ன எம்.ஜி.ஆர்!.. கடுப்பாகி கத்திய கண்ணதாசன்!.. நடந்தது இதுதான்!..

1950,60களில் பாடலாசிரியர், வசனகர்த்தா, கதாசிரியர், தயாரிப்பாளர் என கலக்கியவர் கண்ணதாசன். அவர் பல வேலைகளை செய்திருந்தாலும் ரசிகர்களிடம் பிரபலமடைந்தது பாடலாசியராகத்தான். ஏனெனில், காதல், கத்துவம், சோகம், அழுகை என மனித உணர்வுகளை கச்சிதமாக தனது பாடல் வரிகளில் பிரதிபலித்தார் கண்ணதாசன்.

எனவே, எம்.ஜி.ஆர், சிவாஜி உள்ளிட்ட முன்னணி நடிகர்களின் படங்களுக்கு கண்ணதாசனே பாடல்களை எழுதி வந்தார். ஆனாலும், அவருக்கு போட்டியாக வந்த கவிஞர் வாலி ஒருகட்டத்தில் எம்.ஜி.ஆரின் படங்களுக்கு தொடர்ந்து பாடல்களை எழுதினார். கண்ணதாசன் சிவாஜி உள்ளிட்ட மற்ற நடிகர்களுக்கு பாடல்களை எழுதினார். அரசியல்ரீதியாக எம்.ஜி.ஆரும், கண்ணதாசனும் மோதிக்கொண்டதுதான் அதற்கு முக்கிய காரணம்.

இதையும் படிங்க: வாலி எழுதிய பாடலை கண்ணதாசன் என நினைத்து பாராட்டிய பிரபலம்!. எம்ஜிஆர் சொன்னது இதுதான்!..

எம்.ஜி.ஆரும், சிவாஜிக்கும் பாடலாசிரியர் மாறினாலும் இசையமைப்பாளர் என்னவோ எம்.எஸ்.விஸ்வநாதன்தான். எல்லோரையும் அரவணைத்து பாடல்களை உருவாக்கி வந்தார் எம்.எஸ்.வி. எம்.ஜி.ஆரின் ‘ஒளிவிளக்கு’ படத்திற்கு ஒரு பாடல் காட்சிக்கு சூழ்நிலையை எம்.ஜி.ஆர் வாலியிடம் சொல்ல எம்.எஸ்.வி டியூன் போட்டார். அதற்கு பாடல் வரிகளை எழுதிய வாலி அதை எம்.எஸ்.வி.யிடம் காட்டாமல் நேராக எம்.ஜி.ஆரிடம் காட்டி சம்மதம் வாங்கிவிட்டார்.

இதனால் கோமடைந்தார் எம்.எஸ்.விஸ்வநாதன். ஏனெனில், ‘தைரியமாக சொல் நீ மனிதன்தானா’ என எழுதியிருந்தார் வாலி. சிவாஜியை வைத்து கண்ணதாசன் தயாரித்த ‘லட்சுமி கல்யாணம்’ படத்திற்காக கண்ணதாசன் எழுதிய ‘யாரடா மனிதன் அங்கே’ என்கிற பாடலை ஒலிப்பதிவு செய்து கொடுத்திருந்தார் எம்.எஸ்.வி. இப்போது வாலியும் அதே ஸ்டைலில் மனிதன் என எழுதியிருக்கிறார்.

இதையும் படிங்க: ஏ.ஆர். ரஹ்மான் – வைரமுத்து சண்டைக்கு இதுதான் காரணமா?.. வாலி போல இவர் வரவே மாட்டாரா?.

எனவே, வாலியிடம் வரிகளை மாற்ற சொன்னார் எம்.எஸ்.வி. ஆனால், அவர் மறுத்துவிட எம்.ஜி.ஆரிடம் போனார் எம்.எஸ்.வி. எம்.ஜி.ஆரோ ‘கண்ணதாசனை சமாதானம் செய்து அவர் எழுதிய பாடல் வரிகளை மாற்ற சொல்லுங்கள்’ என சொல்ல கண்ணதாசனிடம் போனார் எம்.எஸ்.வி.

‘ரிக்கார்டிங் செய்த ஒரு பாடல் வரிகளை நான் மாற்ற வேண்டுமா?’ என கத்தினார் கண்ணதாசன். அதன்பின் எம்.ஜி.ஆர் இரண்டு பாடல்களையும் போட்டு பார்த்து இரண்டிலும் ‘மனிதன்’ என்கிற வார்த்தைதான் பொது. மற்றபடி இரண்டுக்கும் சம்பந்தம் இல்லை. எனவே, வாலி எழுதியதை அப்படியே பதிவு செய்யுங்கள் என சொன்னார். எம்.ஜி.ஆர், சிவாஜி படங்கள் வெளியாகி இரண்டு பாடல்களுமே ஹிட் அடித்தது.

இதையும் படிங்க: எம்.ஜி.ஆருக்கு எழுதிய பாடல்!.. வாலிக்கு தொடர்ந்து வந்த கடிதம்!. அந்த லவ் ஸ்டோரி தெரியுமா?..

 

Related Articles

Next Story