வாலி எழுதிய பாடலை கண்ணதாசன் என நினைத்து பாராட்டிய பிரபலம்!. எம்ஜிஆர் சொன்னது இதுதான்!..

0
685
mgr
mgr

50களில் சினிமாவில் அதிக பாடல்களை எழுதிக்கொண்டிருந்தவர் கவிஞர் கண்ணதாசன். காதல் பாடல் என்றாலும் சரி, சோக தத்துவ பாடல் என்றாலும் சரி. இயக்குனர்களும் தயாரிப்பாளர்களும் அழைப்பது அவரைத்தான். அதற்கு காரணம் கண்ணதாசனின் வரிகளில் இருக்கும் அர்த்தம் பொதிந்த வரிகள்தான்.

இரண்டரை மணிநேர படத்தின் கதை என்ன சொல்லுமோ அதை ஒரு பாடல் வரிகளில் சொல்லி விடுவார். ஒருகட்டத்தில் தத்துவ பாடல் என்றாலே அது கண்ணதாசன் என ஆகிவிட்டது. அப்போது கண்ணதாசனுக்கு போட்டியாக வந்தவர்தான் கவிஞர் வாலி. துவக்கத்தில் நல்ல வாய்ப்புகள் கிடைக்கவில்லை என்றாலும் கிடைத்த வாய்ப்புகளில் எழுதிக்கொண்டிருந்தார்.

இதையும் படிங்க: வாலியை கொசு என எழுதிய பத்திரிக்கையாளர்!. அவரிடம் வாலி சொன்ன கமெண்ட்டுதான் ஹைலைட்!..

ஆனால், ஒரு கட்டத்தில் பல படங்களிலும் பாடல் எழுத வாய்ப்பு கிடைத்தது. எம்.ஜி.ஆருக்கு கண்ணதாசன் பாடல்களை எழுதி வந்தாலும் அரசியல் கருத்துவேறுபாட்டால் அவரை கடுமையாக விமர்சித்து வந்தார் கண்ணதாசன். ஏனெனில் இருவரும் வெவ்வேறு அரசியல் கட்சிகளை ஆதரித்தனர்.

ஒருகட்டத்தில் எம்.ஜி.ஆரின் படங்களுக்கு வாலி பாடல்களை எழுதினார். வாலியின் வரிகள் எம்.ஜி.ஆருக்கும் மிகவும் பிடித்திருக்க தொடர்ந்து அவரின் படங்களில் பாடல் வரிகளை எழுதினார் வாலி. அப்படி வாலி எழுதிய பாடல்களை கண்ணதாசன் என்றே ரசிகர்களும் நினைத்தார்கள்.

இதையும் படிங்க: ஏ.ஆர். ரஹ்மான் – வைரமுத்து சண்டைக்கு இதுதான் காரணமா?.. வாலி போல இவர் வரவே மாட்டாரா?.

ரசிகர்கள் அப்படி நினைத்தால் பரவாயில்லை. அனால், ஒரு சினிமா பிரபலமும் அப்படி நினைத்த சம்பவம் பற்றித்தான் இங்கே பார்க்க போகிறோம். அப்போது அதிக சிவாஜி படங்களுக்கு வசனம் எழுதியவர் ஆருர்தாஸ். படகோட்டி படம் வெளியான நேரம் அது. அந்த படத்தில் வாலி எழுதிய ‘கொடுத்ததெல்லாம் கொடுத்தார்.. கரைமேல் பிறக்க வைத்தான்’ போன்ற பாடல்கள் ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றது.

அப்போது எம்.ஜி.ஆரை சந்தித்த ஆருர்தாஸ் ‘என்னதான் உங்களுக்கும், கண்ணதாசனுக்கும் ஆகாது என்றாலும் இந்த படத்தில் பாடல்களை அற்புதமாக எழுதி இருக்கிறார்’ என அவர் சொல்ல எம்.ஜி.ஆர் சிரித்துக்கொண்டே ‘ உங்களை போல்தான் நானும் நினைத்தேன். ஆனால், இந்த பாடல்களை எழுதியர் இவர்தான்’ என சொல்லி அவருக்கு வாலியை அறிமுகம் செய்து வைத்தார். மேலும், இனிமேல் எனக்கு வாலியே பாடல்களை எழுதுவார் என்றும் அறிவித்தார் எம்.ஜி.ஆர்.

இதையும் படிங்க: அசிங்கப்படுத்திய இசையமைப்பாளரை பழிவாங்கிய வாலி!.. கவிஞருக்கு இவ்வளவு கோபம் கூடாது!..

google news