அசிங்கப்படுத்திய இசையமைப்பாளரை பழிவாங்கிய வாலி!.. கவிஞருக்கு இவ்வளவு கோபம் கூடாது!..

Poet vali: தமிழ் சினிமாவில் கவிஞர் கண்ணதாசன் கோலோச்சிய போதே அவருக்கு நிகராக புகழடைந்தவர்தான் கவிஞர் வாலி. வாலியின் பாடல் வரிகளை கண்ணதாசனே பலமுறை பாராட்டியிருக்கிறார். சினிமாவில் பல வருடங்கள் வாய்ப்பு இல்லாமல் தவித்து ஒருவழியாக வாய்ப்புகளை பெற்று பாடல் எழுத துவங்கியவர்தான் வாலி.

'நான் ஆணையிட்டால் அது நடந்துவிட்டால்' போன்ற எம்.ஜி.ஆரின் அரசியல் பாடல்களை எல்லாம் எழுதியவர் வாலிதான். வாலி மிகவும் கோபக்காரர். அவரது தன்மானத்தை சீண்டினால் அவருக்கு அதிக கோபம் வரும். 60களில் தமிழ் சினிமாவை கலக்கிக்கொண்டிருந்த எம்.எஸ்.விஸ்வநாதன் - ராமமூர்த்தி மற்றும் கே.வி.மகாதேவன் ஆகியோரின் இசையில் பல பாடல்களை வாலி எழுதியிருக்கிறார்.

இதையும் படிங்க: அவர் மேல எந்த தப்பும் இல்ல!.. நான்தான் காரணம்!.. வாலிக்காக பழியை ஏற்றுகொண்ட எம்.எஸ்.வி..

அந்த இரண்டு இசையமைப்பாளர்களிடம் வாலியை அறிமுகப்படுத்தியவர் கதாசிரியர் மாறா. 'இதயத்தில் நீ' என்கிற படத்தில் எம்.எஸ்.விஸ்வநாதன் ஈடுபட்டிருந்தபோது அவரிடம் வாலியை அறிமுகம் செய்து வைத்தார் மாறா. அதுதான் எம்.எஸ்.வி இசையில் வாலி பாடல் எழுதிய முதல் திரைப்படம். அதேநேரம், மகாதேவனிடம் வாலிக்கு நல்ல அறிமுகம் கிடைக்கவில்லை.

kv mahadevan

'நீங்காத நினைவு' என்கிற படத்திற்கு பாடல் எழுத வாலியை அவரிடம் அழைத்து சென்றார் மாறா. அப்போது ‘படத்தை ஒழுங்கா எடுக்கணும்னு ஆசை இல்லையா.. வாலி கீலீன்னு யார் யாரையோ பாட்டு எழுத கூட்டிட்டு வந்திருக்கீங்க’ என வாலியின் காது படவே கேட்டார் கே.வி.மகாதேவன். இது வாலிக்கு கோபத்தை ஏற்படுத்தினாலும் பாடலை எழுதி கொடுத்துவிட்டு வந்துவிட்டார்.

இதையும் படிங்க: உங்களுக்காக அதை மாத்த முடியாது!.. எம்.ஜி.ஆரையே எதிர்த்து பேசிய வாலி!.. அதன்பின் நடந்தது இதுதான்!..

அதன்பின் வாலி பல பாடல்களையும் எழுதி முன்னணி பாடலாசிரியராக மாறினார். ஒருமுறை எம்.ஜி.ஆர் - சரோஜாதேவி நடிப்பில் 'உடன்பிறப்பு' என்கிற படம் உருவானது. இந்த படத்திற்கு வசனங்களை எழுதியது கே.பாலச்சந்தர். இந்த படத்தின் தொடக்கவிழாவுக்கு போனா வாலிக்கு ஒரு தட்டில் பழம் மற்றும் ஒரு காசோலையை வைத்து அவரிடம் கொடுத்தார்கள். அப்போது வாலி ‘எங்கே எம்.எஸ்.வி ராமமூர்த்தியை காணோம்?’ என கேட்க ‘இந்த படத்திற்கு இசை கே.வி.மகாதேவன்’ என அங்கிருந்தவர்கள் சொல்ல ‘மன்னிச்சிடுங்க. மகாதேவன் படத்துக்கு நான் பாடல் எழுத மாட்டேன்’ என சொல்லிவிட்டு போய்விட்டார் வாலி.

இந்த தகவல் எம்.ஜி.ஆருக்கு சொல்லப்பட்டது. வாலியை போனில் தொடர்பு கொண்ட எம்.ஜி.ஆர் ‘உங்களுக்கும் மகாதேவனுக்கும் என்ன பிரச்சனை?’ என கேட்க, முதல் சந்திப்பில் மகாதேவன் தன்னை பற்றி பேசியதை வாலி அவரிடம் சொன்னார். அதற்கு எம்.ஜி.ஆர் ‘சரி மகாதேவன் இசையில் நீங்க பாடல் எழுத மாட்டீங்க.. என் படத்துக்கு எழுதுவீங்களா மாட்டீங்களா?’ எனக் கேட்ட வாலியால் மறுக்க முடியவில்லை. அந்த படத்திற்கு பாடல் எழுதி கொடுத்தார். அதேநேரம் ‘உடன்பிறப்பு’ படம் டேக் ஆப் ஆகவில்லை. அந்த படம் வெளியாகவே இல்லை.

மகாதேவன் இசையில் பல படங்களுக்கு வாலி பாடல்கள் எழுத அது எம்.ஜி.ஆருக்கு போய் அவர் மூலம் மகாதேவனுக்கு போகும். அதன்பின் அதற்கு இசையமைப்பார் மகாதேவன். இப்படி வாலிக்கும் அவருக்கும் சுமூக உறவு ஏற்படவே சில வருடங்கள் ஆனது.

இதையும் படிங்க: இளையராஜா போட்ட மெட்டையே பாடலாக்கிய கவிஞர் வாலி.. என்ன பாடல் தெரியுமா?

 

Related Articles

Next Story