Connect with us

Cinema History

உங்களுக்காக அதை மாத்த முடியாது!.. எம்.ஜி.ஆரையே எதிர்த்து பேசிய வாலி!.. அதன்பின் நடந்தது இதுதான்!..

தமிழ் சினிமாவில் 60களில் எம்.ஜி.ஆர், சிவாஜி, ஜெமினி கணேசன் ஆகிய மூவரும் பெரிய நடிகர்களாக இருந்தனர். இவர்கள் எல்லோருக்கும் கவிஞர் கண்ணதாசன் பாடல்களை எழுதி வந்தார். அதேபோல், அதேகாலகட்டத்தில் பாடலசிரியராக நுழைந்து எம்.ஜி.ஆர், சிவாஜி உள்ளிட்ட பலரின் படங்களுக்கும் பாடல்களை எழுதியவர் வாலி.

சிவாஜி கணேசனின் படங்களுக்கும் வாலி எழுதியிருந்தாலும் வாலி அதிகமாக பயணித்தது எம்.ஜி.ஆருடன்தான். எம்.ஜி.ஆருக்கு காதல் பாடல்கள் மட்டுமில்லாமல் சோகம், தத்துவம் என பல வெரைட்டியான பாடல்களை வாலி எழுதியிருக்கிறார். குறிப்பாக, தான் ஆட்சிக்கு வந்தால் என்ன செய்வார் என்பதை வாலியின் பாடல் வரிகள் மூலம் எம்.ஜி.ஆர் ரசிகர்களுக்கும், மக்களுக்கும் காட்டினார். ‘நான் ஆணையிட்டால் அது நடந்துவிட்டால்’ பாடல் உருவானது கூட அப்படித்தான். அதாவது சிவாஜி படங்களுக்கு சூழ்நிலைகளுக்காக பாடல் எழுதும் வாலி எம்.ஜி.ஆரின் படங்களுக்கு அவருக்காக வரிகளை எழுதினார்.

இதையும் படிங்க: நான் பண்ண தப்பு! அத சரி செய்யத்தான் ‘வாலி’ படத்துல நடிச்சேன் – என்ன சொல்றீங்க ஜோதிகா?

அதேநேரம், எம்.ஜி.ஆருக்கும் வாலிக்கும் இடையே அவ்வப்போது சில மோதல்களும் எழுந்துள்ளது. வாலி தன் திறமையின் மீது நம்பிக்கையுள்ளவர். எனவே, அவரின் திறமை குறைவாக மதிப்பிட்டு பேசினால் கோபமடைந்துவிடுவார். இது எம்.ஜி.ஆரிடமே நடந்துள்ளது. ஒருமுறை வாலி எழுதிய பாடலுக்கு எம்.ஜி.ஆர் நடித்துகொண்டிருந்தார். அப்போது வாலியை அவர் சந்திக்க விரும்ப வாலியும் படப்பிடிப்பு தளத்திற்கு போனார்.

vaali2_cine

vaali mgr

அப்போது வாலியிடம் எம்.ஜி.ஆர் ‘நீங்கள் எழுதிய இந்த பாடலில் எந்த அர்த்தமும் இல்லை. ஏதோ பொருள் குற்றம் இருப்பது போல எனக்கு தோன்றுகிறது’ என சொல்ல, வாலியோ ‘இல்லண்ணே.. இந்த பாடலில் எல்லாமே சரியாக இருக்கிறது’ என வாலி சொல்ல எம்.ஜி.ஆர் மீண்டும் மீண்டும் அதையே சொன்னார். இதனால் கோபமடைந்த வாலி ‘உங்களுக்கு புரியவில்லை என்பதற்காக வரிகள் சரியில்லை என சொல்லக்கூடாது’ என சொல்லிவிட்டார். உடனே எம்.ஜி.ஆர் அங்கே இருந்த ஒருவரை அழைத்தார்.

அவர் நன்றாக தமிழ் படித்தவர். வாலிக்கும் தெரிந்த நண்பர். அவரும் பாடல் வரிகளை படித்துவிட்டு ‘எம்.ஜி.ஆர் சொல்வது சரிதான். இதில் ஏதோ தவறு இருக்கிறது’ என சொல்லிவிட்டார். உடனே. எம்.ஜி.ஆரும் படப்பிடிப்பில் கலந்து கொள்ள சென்றுவிட்டார். அதன்பின் அந்த நபர் வாலியிடம் ‘கவிஞரே.. உங்க வரியில் எந்த தவறும் இல்லை. ஆனால், எம்.ஜி.ஆர் அப்படி சொல்லும்போது அதை எதிர்த்து பேசி சிக்கலில் மாட்டிக்கொள்ள எனக்கு விருப்பமில்லை’ என சொல்லிவிட்டார்.

இதையும் படிங்க: எம்.ஜி.ஆருக்கு எழுதிய பாடல்!.. வாலிக்கு தொடர்ந்து வந்த கடிதம்!. அந்த லவ் ஸ்டோரி தெரியுமா?..

உடனே படப்பிடிப்புக்கு போய் எம்.ஜி.ஆரிடம் பேசிய வாலி ‘அண்ணே. இந்த பாடலில் எந்த தவறும் இல்லை. உங்களுக்கு பிடிக்கலன்னு சொல்லுங்க வேறு எழுதி தருகிறேன். ஆனால், வரிகளை மாற்ற முடியாது’ என சொல்ல, எம்.ஜி.ஆர் ‘சரி இத அப்புறம் பேசலாம்’ என சொல்லி வாலியை அனுப்பிவிட்டார். பொதுவாக எம்.ஜி.ஆரிடம் யாராவது அப்படி நடந்துகொண்டால் அவர்களை ஒதுக்கிவிடுவார். வாலியும் அப்படித்தான் நினைத்தார்.

vaali

vaali

ஆனால், ஒரு வாரம் கழித்து வாலியை தொடர்புகொண்ட அப்படத்தின் தயாரிப்பாளர் ‘நீங்கள் எழுதி பாடல் அப்படியே இடம் பெறட்டும் என எம்.ஜி.ஆர் சொல்லிவிட்டார். அதோடு, மற்ற 4 பாடல்களையும் உங்களையே எழுத சொல்லிவிட்டார். நீங்கள் நேரில் போய் எம்.ஜி.ஆரை பார்த்துவிடுங்கள்’ என சொல்ல வாலியும் இராமாபுரம் தோட்டத்துக்கு போனார்.

வாலியை வரவேற்று உபசரித்து சாப்பிட வைத்தார் எம்.ஜி.ஆர். சாப்பிடும்போதும் ‘உங்களை எதிர்த்து பேசிவிட்டேன் என என் மீது உங்களுக்கு கோபமாண்ணே?’ என வாலி கேட்க எம்.ஜி.ஆரோ ‘கோபமே இல்லை.. உங்கள் வரியில் எந்த தவறும் இல்லை.. எனக்காக முகத்தில் முகமூடி போட்டுக்கொள்ளாமல் நேர்மையாக இருந்தீர்களே.. அதுதான் எனக்கு பிடித்திருக்கிறது’ என சொன்னாராம் எம்.ஜி.ஆர்.

இதையும் படிங்க: எம்.எஸ்.வி வேண்டாமென சொன்ன பாடல்!.. வேற படத்தில் வைத்து ஹிட் ஆக்கிய வாலி!.

google news
Continue Reading

More in Cinema History

To Top