Cinema History
என்னை தூக்கிட்டு அந்த நடிகர போட்டாங்க!.. முதல் படத்திலேயே ஏமாந்து போன தேங்காய் சீனிவாசன்!..
நாடகங்களில் நடித்து பின்னர் சினிமாவில் நுழைந்தவர் தேங்காய் சீனிவாசன். ஒரு நாடகத்தில் தேங்காய் வியாபாரியாக பட்டைய கிளப்ப அதுவே அவரின் பெயருக்கு முன்னால் ஒட்டிக்கொண்டது. சீனிவாசனின் அப்பாவும் ஒரு நாடக நடிகர் என்பதால் இயல்பாகவே சீனிவாசனுக்கும் அந்த ஆர்வம் வந்தது.
ஒரு விரல் என்கிற திரைப்படம் மூலம்தான் சீனிவாசன் சினிமாவில் நடிக்க துவங்கினார். அந்த படம் ஹிட் அடிக்கவே தொடர்ந்து படங்களில் நடிக்க வாய்ப்பு வந்தது. காமெடிதான் தனக்கு சரியான ரூட் என புரிந்துகொண்டு அந்த ரூட்டில் பயணித்தார் சீனிவாசன். எம்.ஜி.ஆர், சிவாஜி, ஜெய்சங்கர் என பலரின் படங்களிலும் நடித்திருக்கிறார்.
இதையும் படிங்க: வாலிக்காக வரிகளை மாற்ற சொன்ன எம்.ஜி.ஆர்!.. கடுப்பாகி கத்திய கண்ணதாசன்!.. நடந்தது இதுதான்!..
பல படங்களில் நெகட்டிவ் வேடங்களிலும் நடித்திருக்கிறார். அதேபோல், குணச்சித்திர நடிகராகவும் கலக்கி இருக்கிறார். ஒரு மாதத்தில் இவரின் நடிப்பில் 20க்கும் மேற்பட்ட படங்கள் வெளியாகும் அளவுக்கு 70களில் பிசியான நடிகராக இருந்தார் சீனிவாசன். பாலச்சந்தர் இயக்கத்தில் ரஜினி நடித்த தில்லு முல்லு படத்தில் மாதவியின் அப்பாவாக அசத்தலாக் நடித்து ரசிகர்களை சிரிக்க வைத்திருக்கிறார்.
தேங்காய் சீனிவாசன் கடைசியாக நடித்த திரைப்படம் கிருஷ்ணன் வந்தான். இது கவிஞர் வாலி எழுதி நாடகம் ஆகும். இது சினிமாவாக உருவானது. 1987ம் வருடம் மரணமடைந்தார். சினிமாவில் வாய்ப்பு என்பது அவ்வளவு சுலபமில்லை. திடீரென ஒருநாளில் ஒருவருக்கு கிடைக்கும் வாய்ப்பு இன்னொருவருக்கு போய்விடும்.
தேங்காய் சீனிவாசனுக்கும் அப்படித்தான் நடந்தது. இதுபற்றி ஒருமுறை ஒரு பேட்டியில் சொன்ன தேங்காய் சீனிவாசன் ‘எனக்கு முதல் படத்தில் நடிக்க வாய்ப்பு வந்து அட்வான்ஸ் 301 ரூபாய் கொடுத்தார்கள். அதை எடுத்துக்கொண்டு திருப்பதிக்கு போய் சாமி கும்பிட்டுவந்து படப்பிடிப்புக்கு போனேன். ஆனால், வியாபார நோக்கத்துக்காக நாகேஷை போட்டுவிட்டார்கள். அதோடு, இந்த படத்தில் நீ இல்லை’ எனவும் சொல்லிவிட்டார்கள். அதன் பின்னர்தான் எனக்கு ஒரு விரல் படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது’ என கூறினார்.
இதையும் படிங்க: அப்பவே அந்த வேலையைப் பற்றி அப்பட்டமாக சொன்ன தேங்காய் சீனிவாசன்… என்ன படத்தில் தெரியுமா?