SK21 படத்துக்காக சிவகார்த்திகேயன் பட்ட பாடு!. படத்துல பாருங்க!.. ஜிம் டிரெய்னர் சொல்றத கேளுங்க!..

Published on: February 14, 2024
---Advertisement---

டிவி ஆங்கராக இருந்து அப்படியே சினிமாவில் நுழைந்தவர் சிவகார்த்திகேயன். மெரினா என்கிற படம் மூலம் சினிமாவில் நடிக்க துவங்கி அடுத்து மனம் கொத்தி பறவை படத்திலும் நடித்தார். தனுஷின் தயாரிப்பில் அவர் நடித்த எதிர்நீச்சல் திரைப்படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது.

அதன்பின் அவருக்கு கிடைத்த வாய்ப்புதான் வருத்தப்படாத வாலிபர் சங்கம். இந்த படம் சூப்பர் ஹிட் அடித்து சிவகார்த்திகேயனை பட்டிதொட்டியெங்கும் கொண்டு சேர்த்தது. அதேபோல், ரஜினி முருகன் படத்தின் வெற்றி அவரை ஒரு முன்னணி இளம் நடிகராக மாற்றியது. அதன்பின் மார்க்கெட்டை பிடித்துகொண்ட சிவகார்த்திகேயன் படிப்படியாக முன்னேறினார்.

இதையும் படிங்க: குடியை நிறுத்திய அஜித்! அதற்கு காரணமே இவர்தானாம்.. என்ன ஒரு நட்புபா?

குறுகிய காலகட்டத்தில் விஜய், அஜித்துக்கு அடுத்து இடத்திற்கு வந்தார். சம்பளமும் அதிகரித்து கொண்டே போனது. ஒருபக்கம் சொந்த படங்கள் எடுத்து கையை சுட்டு 100 கோடி கடனாளி ஆனார். பல வருடங்களாக போராடி கொஞ்சம் கொஞ்சமாக அடைத்து இப்போது கடனிலிருந்து மீண்டிருக்கிறார். அயலான் படத்தில் கூட அவர் சம்பளம் வாங்கவில்லை. அந்த பணம் கடனுக்கு போனது.

sivakarthikeyan

இப்போது ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிப்பில் ராஜ்குமார் பெரியசாமி இயக்கும் ஒரு புதிய படத்தில் கடந்த சில மாதங்களாகவே நடித்து வருகிறார. இந்த படத்தில் முதன் முறையாக சிவகார்த்திகேயன் ராணுவ வீரராக நடித்திருக்கிறார். ஏற்கனவே டாக்டர் படத்தில் ராணுவத்தில் மருத்துவராக நடித்தார். ஆனால், இதில் முழுக்க முழுக்க நாட்டுக்காக போராடும் கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்.

இதையும் படிங்க: உலகளவில் 5 நாளில் லால் சலாம் வசூல் எவ்வளவு தெரியுமா?.. ரஜினி மகளால் நொந்து நூடுல்ஸ் ஆன லைகா!

இதற்காக தனது உடலையும் ஒரு ராணுவ வீரர் போல மாற்றியிருக்கிறார். கடந்த சில மாதங்களாக ஜிம்மில் உடல்பயிற்சி செய்து சிக்ஸ் பேக்கும் வைத்திருப்பதாக சொல்லப்படுகிறது. இந்நிலையில், இந்த படத்திற்காக அவருக்கு பயிற்சி கொடுக்கும் ஜிம் டிரெய்னர் சந்தீப் சமீபத்தில் அளித்த பேட்டியில் ‘இது ராணுவ பின்னணியில் நடக்கும் ஒரு உண்மைக்கதை. இந்த படத்திற்காக சிவகார்த்திகேயன் நிறைய உழைப்பை செலுத்தி இருக்கிறார்.

sk

அவரை ஒரு ராணுவ வீரர் போல மாற்றுவதற்கு எங்களிடம் 3 மாதங்கள் மட்டுமே இருந்தது. துவக்கத்தில் சிவகார்த்திகேயன் மிகவும் கஷ்டப்பட்டார். தொடர்ந்து வொர்க் அவுட், உணவு கட்டுப்பாடு ஆகியவற்றின் மூலம் உடலை குறைத்தார். அவரின் உழைப்பை நீங்கள் திரையில் பார்ப்பீர்கள்’ என சொல்லி இருக்கிறார். சமீபத்தில் தனது கட்டுடலை பின்பக்கம் புகைப்படம் எடுத்து எஸ்.கே. வெளியிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: அஜித் போன இடத்துக்கு நாம போறதா?.. வெற்றி துரைசாமி உடலுக்கு அஞ்சலி செலுத்தாமல் யுடர்ன் அடித்த விஜய்

சிவா

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.