Connect with us

Cinema News

அஜித் போன இடத்துக்கு நாம போறதா?.. வெற்றி துரைசாமி உடலுக்கு அஞ்சலி செலுத்தாமல் யுடர்ன் அடித்த விஜய்

அதிமுகவின் முன்னாள் எம்எல்ஏ சைதை துரைசாமியின் மகன் வெற்றி துரைசாமி இமய மலைக்கு சுற்றுலா சென்ற நிலையில், அங்கே உள்ள சட்லஜ் ஆற்றில் விழுந்து அவர் உயிரிழந்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

அவரது உடலை சில நாட்கள் தீவிரமாக தேடி மீட்புப் படையினர் கடைசியாக மீட்ட நிலையில், நேற்று வெற்றி துரைசாமியின் உடல் சென்னையில் உள்ள அவரது வீட்டுக்கு கொண்டு வரப்பட்டது. தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், அதிமுக தலைவர்கள் உள்ளிட்ட பல அரசியல் தலைவர்கள் வெற்றி துரைசாமிக்கு இறுதி அஞ்சலி செலுத்தினர்.

இதையும் படிங்க: லவ் அண்ட் லவ் ஒன்லி!.. காதலர் தினத்தை கொண்டாட தியேட்டருக்கு படையெடுத்த படங்கள்.. எல்லாமே தரம்!

நடிகர் அஜித் காலையிலேயே வெற்றி துரைசாமியின் வீட்டுக்குச் சென்று குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறிவிட்டு வந்த வீடியோ காட்சிகள் வெளியாகி ரசிகர்களை ஆச்சர்யத்தில் ஆழ்த்தியது. நடிகை ஷாலினி மாலை வரை வெற்றி துரைசாமி வீட்டில் இருந்து அனைத்து வேலைகளையும் பார்த்துக் கொண்டார் என தகவல்கள் வெளியாகின.

அஜித் மற்றும் வெற்றி துரைசாமி இருவருமே டிராவல் பிரியர்கள் என்பதால், இருவருக்கும் இடையே பல ஆண்டுகளாக நல்ல நட்பு நிலவி வந்த நிலையில், வெற்றியின் மறைவுக்கு நடிகர் அஜித் நேரடியாக சென்று ஆறுதல் கூறினார்.

இதையும் படிங்க: சமத்தா சோபாவுல!.. சமந்தா என்ன பண்றாரு பாருங்க.. இப்போ எல்லாம் அந்த வேலையை இவரே பார்க்குறாரா?..

நடிகர் விஜய் சூட்டிங் முடித்து விட்டு வெற்றி துரைசாமி உடலுக்கு அஞ்சலி செலுத்த வருவதாக தகவல்கள் வெளியாகின. ஆனால், கூட்ட நெரிசல் அதிகமாக இருந்த நிலையில், விஜய் அங்கே செல்லாமல் திரும்பி விட்டதாக தமிழக வெற்றி கழகம் சார்பில் அறிவிப்பு வெளியாகி உள்ளது. விஜய்க்கு பதிலாக புஸ்ஸி ஆனந்த் உள்ளிட்டோர் அங்கே சென்று அஞ்சலி செலுத்தியுள்ளனர்.

விஜயகாந்த் உடலுக்கு விஜய் நேரில் சென்று அஞ்சலி செலுத்தும் போது ஓவர் கூட்ட நெரிசல் இருந்தது. அதையும் பொருட்படுத்தாமல் அங்கே சென்று அஞ்சலி செலுத்தி வந்தார் விஜய். ஆனால், அவர் மீது செருப்பு வீசி அவமானப்படுத்தப்பட்ட சம்பவங்கள் காரணமாக கூட்ட நெரிசலை அவர் தவிர்த்து விட்டாரா? என்கிற கேள்விகள் எழுந்துள்ளன.

google news
Continue Reading

More in Cinema News

To Top