சவுகார் ஜானகியிடம் பிடித்த குணம் அதுதான்… குஷ்பு சொன்ன அந்த தகவல்!
அண்மையில் நம்மை விட்டு மறைந்த சவுகார் ஜானகி எப்படிப்பட்ட ஆற்றல்மிக்க நடிகை என்பது அனைவருக்கும் தெரிந்த விஷயம். 1950ம் ஆண்டு சௌகார் என்ற திரைப்படத்தின் மூலம் தன்னோட கலைப்பயணத்தைத் துவங்கினார் சவுகார் ஜானகி. தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் ஆகிய 4 மொழிகளிலும் தொடர்ந்து நடிக்கின்ற வாய்ப்பினைக் கடந்த 70 வருடங்களாகப் பெற்றார் என்றால் அதற்கு முக்கியமான காரணம், அவரிடம் இருந்த அந்த அபார நடிப்புத்திறன் தான். கன்னட திரை உலகின் சூப்பர்ஸ்டாரான ராஜ்குமாரோடு பல திரைப்படங்களில் […]

அண்மையில் நம்மை விட்டு மறைந்த சவுகார் ஜானகி எப்படிப்பட்ட ஆற்றல்மிக்க நடிகை என்பது அனைவருக்கும் தெரிந்த விஷயம். 1950ம் ஆண்டு சௌகார் என்ற திரைப்படத்தின் மூலம் தன்னோட கலைப்பயணத்தைத் துவங்கினார் சவுகார் ஜானகி. தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் ஆகிய 4 மொழிகளிலும் தொடர்ந்து நடிக்கின்ற வாய்ப்பினைக் கடந்த 70 வருடங்களாகப் பெற்றார் என்றால் அதற்கு முக்கியமான காரணம், அவரிடம் இருந்த அந்த அபார நடிப்புத்திறன் தான்.
கன்னட திரை உலகின் சூப்பர்ஸ்டாரான ராஜ்குமாரோடு பல திரைப்படங்களில் கதாநாயகியாக நடித்துள்ளார். அதே போல ஒரு காலகட்டத்தில் அவருக்கு சகோதரியாகவும், ஒரு காலகட்டத்தில் அவருக்கு மனைவியாகவும் நடிக்கின்ற வாய்ப்பைப் பெற்றார். ஆரம்பத்தில் சவுகார் ஜானகி ஆல் இண்டியா ரேடியோவில் பணியாற்றிய காலகட்டத்திலேயே, திரை உலக வாய்ப்புகள் அவரைத் தேடி வந்தன.
அப்போது அவரால அதை ஏற்றுக்கொள்ள முடியவில்லை. அதற்கு முக்கிய காரணம், அவரது குடும்பத்தில் இருந்த எதிர்ப்பு தான். அதனாலேயே திருமணமாகி குழந்தையும் பெற்ற பிறகு தான், சவுகார் என்ற படத்தில் நடிக்கும் வாய்ப்பு அவருக்குக் கிடைத்தது. சவுகார் என்ற திரைப்படத்தோட மாபெரும் வெற்றி தான், அவரது பெயரோடு சவுகார் என்ற பட்டத்தையும் இணைத்தது. சவுகார் திரைப்படம் சவுகார் ஜானகிக்கு மட்டும் முதல் திரைப்படம் அல்ல. ஆந்திர திரை உலகின் மிகப்பெரிய ஆளுமையான என்டி.ராமராவுக்கும் அதுதான் முதல் படம்.
வெற்றி விழா படத்தில் பணியாற்றிய போதுதான், சவுகார் ஜானகியை சந்திக்கக்கூடிய வாய்ப்பு எனக்கு அமைந்தது. தன் மனசுக்கு என்ன தோணுதோ, அதை தைரியமாக, வெளிப்படையாக சொல்லக்கூடிய குணம் கொண்டவர். அந்த குணம் என்னை மிகவும் கவர்ந்த ஒன்று என்று ஒரு பத்திரிகை பேட்டியில் பதிவு செய்துள்ளார் நடிகை குஷ்பு. மேற்கண்ட தகவலை பிரபல தயாரிப்பாளர் சித்ரா லட்சுமணன் பகிர்ந்துள்ளார்.






