இசை வெளியீட்டு விழாவும் இல்ல, குட்டிக் கதையும் இல்லையா?.. Jailer 2க்கு வேற ப்ளான் போட்ட ரஜினி!

‘ஜெயிலர் 2’ படத்தின் இரண்டு பாடல்கள் சமீபத்தில் ரிலீஸ் ஆனது.

Jailer 2

கோலிவுட்டின் ‘சூப்பர் ஸ்டார்’ ரஜினிகாந்த் நடித்து முடித்திருக்கும் லேட்டஸ்ட் படம் ‘ஜெயிலர் 2’. படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் வேலைகள் ஜெட் ஸ்பீடில் நடைபெற்று வருகிறது.

ஏன்னா, ஆல்ரெடி படத்தின் ரிலீஸ் தேதி வருகிற அக்டோபர் 15 என்று லாக் பண்ணி விட்டார்கள். ஃபர்ஸ்ட் பார்ட்டை தரமாக இயக்கிய நெல்சன் தான் இதுக்கும் இயக்குநர்.

சமீபத்தில், அனிருத் இசையில் ரிலீஸ் ஆன ‘அல்ல போலேலோ’ மற்றும் ‘ஒன் சன் ஒன் மூன்’ ஆகிய இரண்டு பாடல்களுமே ரசிகர்களிடம் அதிக லைக்ஸ் குவித்தது.

அடுத்து இதன் ஆடியோ ரிலீஸுக்காகவும், அதில் ரஜினி பேசப்போகும் குட்டிக் கதைக்காகவும் ரசிகர்கள் வெயிட் பண்ணிக் கொண்டிருந்தார்கள். அவர்களுக்கு ஒரு ஷாக்கிங் நியூஸ்.

இந்த வாட்டி ‘ஜெயிலர் 2’-வுக்கு இசை வெளியீட்டு விழா வேண்டாம் என்று ரஜினி சொல்லி விட்டாராம். அதுக்கு பதிலாக தலைவரின் ஒரு ஸ்பெஷல் பேட்டி ‘சன் பிக்சர்ஸ்’ தரப்பில் இருந்து விரைவில் வெளி வருமாம்.

CR
ஆசிரியர்

siva

Cinereporters செய்திக் குழு.

மேலும் →

சமீபத்திய சினிமா செய்திகள்

அனைத்தும் →