ஜெயிலர் 2 தெலுங்கு ரைட்ஸுக்கு 55 கோடிலாம் முடியாது… சூர்யா பட தயாரிப்பாளர் இவ்ளோதான் கொடுத்தாரா?

ரஜினிக்கு தெலுங்கிலும் நல்ல மார்க்கெட் உள்ளது.

Jailer 2

‘சூப்பர் ஸ்டார்’ ரஜினிகாந்த் நடிப்பில் ‘ஜெயிலர் 2, தர்மன், KHxRK Reunion படம்’ என மூன்று படங்கள் லைன் அப்பில் இருக்கிறது. இதில் ‘ஜெயிலர் 2’ படத்தை ‘சன் பிக்சர்ஸ்’ தயாரிக்க, இயக்குநர் நெல்சன் தான் இயக்கியுள்ளார்.

இதில் தலைவருக்கு ஹெல்ப் பண்ணுவது போல் கெஸ்ட் ரோல்களில் ‘மக்கள் செல்வன்’ விஜய் சேதுபதி, மலையாள நடிகர் மோகன்லால், கன்னட நடிகர் ஷிவராஜ்குமார், பாலிவுட் நடிகர் ஹ்ரித்திக் ரோஷன் ஆகியோர் நடித்துள்ளார்கள்.

படத்தை வருகிற அக்டோபர் 15-ஆம் தேதி திரைக்கு கொண்டு வருகிறார்கள். ரஜினிக்கு ஆந்திரா மற்றும் தெலுங்கானாவிலும் மிகப் பெரிய ஃபேன் ஃபாலோயிங் இருக்கிறது.

இதனால் ‘ஜெயிலர் 2’ படத்தின் தெலுங்கு வெளியீட்டு உரிமையை ரூ.55 கோடிக்கு தான் தரமுடியும் என ‘சன் பிக்சர்ஸ்’ நிறுவனம் கூறி வந்தது. தற்போது, சூர்யாவின் ‘விஸ்வநாத் & சன்ஸ்’ படத்தை தயாரித்த ‘சித்தாரா எண்டர்டெயின்மெண்ட்ஸ்’ நிறுவனம் ரூ.45 கோடிக்கு டீல் பேசி முடித்து விட்டதாக அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகியுள்ளது.

CR
ஆசிரியர்

siva

Cinereporters செய்திக் குழு.

மேலும் →

சமீபத்திய சினிமா செய்திகள்

அனைத்தும் →