கடந்த 33 வருடங்களாக தமிழ் சினிமாவில் நடித்த வந்த விஜய் தனக்கென ஒரு பெரிய ரசிகர் கூட்டத்தை உருவாக்கியிருக்கிறார். குறிப்பாக 15 வயதிற்கு மேற்பட்ட சிறுவர்கள் பலரும் விஜய்க்கு ரசிகர்களாக இருக்கிறார்கள். சிறுவர்கள் மட்டும்தான் என்றில்லாமல் வயதானவர்கள் கூட விஜயை ரசிக்கிறார்கள்.. விஜய் தம்பி.. விஜய் தம்பி.. என ஆசையாக அழைக்கிறார்கள். அந்த அளவுக்கு மக்கள் மனதில் இடம் பிடித்திருக்கிறார் விஜய். இன்னும் சொல்லப்போனால் அந்த நம்பிக்கையில்தான் அரசியலிலும் இறங்கியிருக்கிறார் விஜய்.
கரூர் சம்பவத்தின் போது கூட அந்த ஊரைச்சேர்ந்த மக்கள் பலரும் விஜய்க்கு ஆதரவாக பேசினார்கள்.. ‘விஜய் தம்பி மீது எந்த தவறும் இல்லை’ என்றெல்லாம் அவர்கள் சொன்னது விஜயின் மனதை உலுக்கிவிட்டது. எனவேதான் இந்த மக்களுக்காக ஏதாவது செய்ய வேண்டும் என்கிற மனநிலையில் அவர் அரசியலுக்கு வந்திருப்பதாக சொல்லப்படுகிறது. சமீபத்தில் ஈரோடு மாவட்டத்தில் நடந்த பொதுக்கூட்டத்தில் பேசும்போதும் மிகவும் ஆக்ரோஷமாக பேசினார் விஜய்.
அதேபோல் சமீபத்தில் மலேசியாவில் ஜனநாயகன் படத்தின் இசை வெளியீட்டு விழா மிகவும் பிரமாண்டமாக நடந்தது. இந்த விழாவில் சுமார் ஒரு லட்சம் பேர் வரை கலந்து கொண்டனர். விஜய்க்கு இது கடைசி படம் என்பதை ஏற்றுக்கொள்ள முடியவில்லை என்று பலரும் அந்த மேடையில் பேசினார்கள். நடிகர் நாசர் கூட விஜய் தனது முடிவை பரீசிளிக்க வேண்டும் என கோரிக்கை வைத்தார்.
இந்நிலையில் விஜயின் அரசியல் பிரவேசம் பற்றி கருத்து தெரிவித்துள்ள நடிகையும் பாஜக நிர்வாகியுமான குஷ்பு ‘ஜனநாயகன் தனது கடைசி படம் என விஜய் சொன்னது வருத்தமாக இருக்கிறது.. நான் அவரின் மிகப்பெரிய ரசிகை.. தம்பியின் கடைசி படம் என யோசித்தால் அதிர்ச்சியாக இருக்கிறது.. ஆனாலும் அவர் ஒரு புதிய பயணத்தை தொடங்கியிருக்கிறார்.. அவருக்கு என் வாழ்த்துக்கள்’ என்று கூறியிருக்கிறார்.
