பாசிட்டிவ் விமர்சனங்களால் 2ம் நாள் வசூலில் முன்னேறிய டோரதி

இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் கீர்த்தி சுரேஷ், ரிஷிகாந்த், சனந்த் உள்ளிட்டோர் நடித்து நேற்று முந்தினம் வெளியான படம் டோரதி

dorathi

இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் கீர்த்தி சுரேஷ், ரிஷிகாந்த், சனந்த் உள்ளிட்டோர் நடித்து நேற்று முந்தினம் வெளியான படம் டோரதி. கடந்த செப்டம்பர் 25ஆம் தேதி திரையரங்குகளில் வெளியான இப்படம், வித்தியாசமான கதைக்களத்துடன் ரசிகர்கள் மத்தியில் கவனம் பெற்றுள்ளது.

1990-களின் மதுரை பின்னணியில் உருவாகியுள்ள இப்படம், நட்பு, வன்முறை, ஆணாதிக்கம், பாலினப் பாகுபாடு, அடையாளம் உள்ளிட்ட பல்வேறு விஷயங்களை மையமாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, வழக்கமான கமர்ஷியல் திரைப்படங்களிலிருந்து மாறுபட்ட அணுகுமுறையை கார்த்திக் சுப்பராஜ் கையாண்டிருப்பது படத்தின் முக்கிய அம்சமாக பார்க்கப்படுகிறது.

படத்திற்கு விமர்சகர்கள் மத்தியில் பாராட்டுகள் கிடைத்துள்ள நிலையில், பொதுவான ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களும் வெளியாகி வருகின்றன. படத்தின் unconventional கதை சொல்லும் முறை, மெதுவாக நகரும் திரைக்கதை மற்றும் சில உணர்வுப்பூர்வமான விஷயங்களை கையாளும் விதம் அனைவருக்கும் பிடிக்கவில்லை என சில விமர்சனங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அதே நேரத்தில், படத்தின் கதைக்களம் மற்றும் கார்த்திக் சுப்பராஜின் இயக்கம் பாராட்டப்படுவதுடன், சனந்த், ரிஷிகாந்த் ஆகியோரின் நடிப்பும் இளையராஜாவின் இசையும் படத்தின் பலமாக குறிப்பிடப்பட்டுள்ளன.

இந்நிலையில், டோரதி திரைப்படம் 2 நாளில் ரூ.1 கோடியே 17 லட்சம் ரூபாய் வசூல் செய்துள்ளது. முதல் நாளில் 90 லட்சம் ரூபாய் மட்டுமே வசூல் செய்திருந்த நிலையில் 2ம் நாள் வசூல் முன்னேற்றம் அடைந்துள்ளது.

CR
ஆசிரியர்

Sai Vikas

சாய் விகாஷ். இவர் டிஜிட்டல் செய்தி துறையில் துறையில் 15 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். குறிப்பாக தமிழில் முன்னணி பத்திரிக்கைகளின் இணையதள் அசெய்தி பிரிவில் ஆசிரியராக பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, அரசியல் சார்ந்த செய்திகள் வழங்குவதில் ஆர்வம் உள்ளவர் மின் அஞ்சல் முகவரி [email protected]

மேலும் →

சமீபத்திய சினிமா செய்திகள்

அனைத்தும் →