டோரதி பண்ண பெரிய நம்பிக்கை வேணும்… கார்த்திக் சுப்புராஜை புகழ்ந்து தள்ளிய பிரபல இயக்குநர்கள்!
டோரதி திரைப்படம் வருகிற செப்டம்பர் 25-ஆம் தேதி ரிலீஸ் ஆகவுள்ளது.

‘பீட்சா’ படம் மூலமாக ஒரு சிறப்பான இயக்குநர் தமிழ் சினிமாவுக்கு கிடைத்தார். அவர் தான் கார்த்திக் சுப்புராஜ். ‘சூப்பர் ஸ்டார்’ ரஜினிகாந்தை வைத்தே ‘பேட்ட’ என்ற தரமான சம்பவம் செய்தவரும் இவரே.
இதுவரை ஒன்பது படங்களை இயக்கியிருக்கிறார். இவர் இயக்கத்தில் உருவாகியிருக்கும் 10-வது படம் தான் ‘டோரதி’.
இதில் கீர்த்தி சுரேஷ், சனந்த், ரிஷிகாந்த் நடித்துள்ளார்கள். இதற்கு ‘இசைஞானி’ இளையராஜா தான் இசையமைத்துள்ளார். ஆல்ரெடி பாடல்கள் மற்றும் ட்ரெய்லர் வெளியாகி படத்தின் மீதான எதிர்பார்ப்பை எகிற வைத்தது.
படத்தை வருகிற செப்டம்பர் 25-ஆம் தேதி திரையரங்குகளில் ரிலீஸ் செய்யத் திட்டமிட்டிருக்கிறார்கள். தற்போது, இந்த படத்தை பார்த்து ரசித்த பிரபல தமிழ் திரைப்பட இயக்குநர்கள் சசி, லிங்குசாமி, சுரேஷ் கிருஷ்ணா, அருண் மாதேஸ்வரன், ஏ.ஆர்.முருகதாஸ் ஆகியோர் பாராட்டிய வீடியோ பதிவு வெளியாகியுள்ளது.












