அவன் காலை பிடிச்சி படம் பண்ணனுமா?!.. வெங்கட் பிரபுவிடம் கோபப்பட்ட கங்கை அமரன்..

கங்கை அமரன் கோபம்

gangai

சென்னை 28 திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராக களமிறங்கியவர் வெங்கட் பிரபு. இவர் இசையமைப்பாளர், பாடகர் மற்றும் இயக்குனர் கங்கை அமரனின் மூத்த மகன். சென்னை 28 ஹிட் அடிக்கவே தொடர்ந்து சரோஜா, கோவா, மங்காத்தா உள்ளிட்ட சில படங்களை இயக்கினார். மங்காத்தா சூப்பர் ஹிட் அடித்து அஜித்தின் கெரியரில் ஒரு முக்கிய படமாக அமைந்தது. விஜயை வைத்து கோட் திரைப்படத்தை வெங்கட்பிரபு இயக்கினார். இந்த திரைப்படம் கலவையான விமர்சனங்களை பெற்றது..

இந்த திரைப்படம் 2024ம் வருடம் செப்டம்பர் மாதம் வெளியானது. அதாவது கோட் படம் வெளியாகி 2 வருடங்கள் முடிந்து விட்டது. ஆனாலும் இப்போது வரை வெங்கட் பிரபுவின் புதிய படம் துவங்கப்படவில்லை. சிவகார்த்திகேயனிடம் கதை சொல்லி அவரும் நடிக்க சம்மதித்தார். ஆனால், திடீரென சில படங்களை முடித்துவிட்டு வருகிறேன் என சொல்லி வெங்கட்பிரபுவை டீலிங்கில் விட்டார்,

இந்நிலையில்தான், சமீபத்தில் ஊடகம் ஒன்றில் பேசிய கங்கை அமரன் ‘வெங்கட் பிரபு ஒரு நடிகரை நம்பியிருந்தார். அதனால் அவரின் படம் தாமதமாகிக் கொண்டே போகிறது.. அந்த நடிகரை குறை சொல்ல முடியாது.. அவர் வாழட்டும்.. வெங்கட் பிரபு கதையெல்லாம் ரெடி பண்ணிட்டான்.. அந்த நடிகரும் கால்ஷீட் கொடுத்துட்டார்.. ஆனால் அந்த நடிகரோட ஒரு படம் ஹிட்டானவுடனே அந்த இயக்கனரோட ரெண்டு படம் எடுத்துட்டுதான் அடுத்த படத்தை பண்ணுவேன்னு சொல்லிட்டார்..

நான் வெங்கட் பிரபுவிடம் ‘இது உனக்கு தேவையா? எவ்வளவு பெரிய நடிகராக இருந்தாலும் இதற்கு மேல் அவன் கால்ல விழுந்து நடிக்க வைக்கணுமா? அது நம் குடும்பத்துக்கு அவமானம் இல்லையா? அவன் உன்னை உதாசீனப்படுத்தறான்.. நீயும் அவனை உதாசீனப்படுத்தி அவன் படத்தை நீ பண்ணக்கூடாது’ என்று சொன்னேன்’ எனக் கூறியிருக்கிறார். கங்கை அமரன் கூறிய அந்த நடிகர் சிவகார்த்திகேயன்தான் என பலரும் சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகிறார்கள்.

CR
ஆசிரியர்

சிவா

முருகன். இவர் டிஜிட்டல் செய்தி துறையில் துறையில் 12 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். குறிப்பாக இணையதள செய்தி பிரிவில் பணியாற்றியவர். சினிமா, அரசியல் மற்றும் விளையாட்டு சார்ந்த செய்திகள் வழங்குவதில் ஆர்வம் உள்ளவர். இந்த தளத்தில் கடந்த 10 ஆண்டுகளாக செய்தி ஆசிரியராக பணியாற்றி வருகிறார். மின் அஞ்சல் முகவரி [email protected]

மேலும் →

சமீபத்திய சினிமா செய்திகள்

அனைத்தும் →