விஜயிடம் கேட்டேன்!.. அடுத்த நாளே ஒரு கோடி!.. கார்த்திக் நெகிழ்ச்சி!..
விஜய் கொடுத்த நிதி பற்றி கார்த்தி பேசியிருக்கிறார்.

திரையுலகில் 30 வருடங்களுக்கு மேல் முக்கிய நடிகராக வலம் வந்தவர் நடிகர் விஜய். ஆனால், தமிழக வெற்றிக் கழகம் என்கிற அரசியல் கட்சியை தொடங்கி 2026 சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்டு 108 தொகுதிகளில் வெற்றி பெற்று அவர் தமிழ்நாட்டின் முதலமைச்சராக மாறியிருக்கிறார்.
அவர் முதலமைச்சர் பதவியேற்ற சில நாட்களில் நடிகர் சங்கம் சார்பாக கருணாஸ் ,கார்த்தி, நாசர் ஆகியோர் அவரை நேரில் சென்று சந்தித்தனர். இந்நிலையில்தான் இன்று நடிகர் சங்கத்தின் 70வது பொதுக்குழு கூட்டம் சென்னையில் உள்ள வள்ளுவர் கோட்டத்தில் நடைபெற்று வருகிறது..
இந்த கூட்டத்தில் பேசிய நடிகர் கார்த்தி ‘இப்போது முதல்வராக இருக்கும் நமது விஜய் அண்ணனை நடிகராக இருக்கும் போது அவரை சந்தித்து ‘அண்ணா இந்த மாதிரி பில்டிங் வேலை போயிட்டிருக்கு. உங்க உதவி வேணும்’ என்று கேட்டோம். அடுத்த நாளே ஒரு கோடி ரூபாய் நிதி கொடுத்தார்.
டிசம்பர் மாதம் மார்கழி தொடங்குவதற்கு முன்பு கூடிய விரைவில் நடிகர் சங்க கட்டிடத்தை கட்டி முடிப்பதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன என அவர் கூறியிருக்கிறார்.












