Actor Karthi: கார்த்தியின் சரிவுக்கு இதுதான் காரணம்!.. போட்டு உடைத்த பிஸ்மி!…
கார்த்தியின் தொடர் தோல்வி பற்றி வலைப்பேச்சு பிஸ்மி கருத்து..

சினிமாவில் நடிக்க ஆசை: நடிகர் சிவக்குமாரின் இளைய மகன் கார்த்தி. வெளிநாட்டில் படித்தவர்.. இவருக்கு நடிகராக வேண்டும் என்கிற ஆசை. சென்னை வந்த கார்த்தி இயக்குனர் மணிரத்தினத்திடம் உதவி இயக்குனராக வேலை செய்தார். அதன்பின் பருத்திவீரன் திரைப்படம் மூலம் அவர் நடிக்க தொடங்கினார்.
தொடர் தோல்வி படங்கள்: முதல் படமே சூப்பர் ஹிட். எனவே தொடர்ந்து திரைப்படங்களில் நடித்தார் கார்த்தி. எல்லோருக்கும் பிடித்த நடிகராக கார்த்தி இருந்தாலும் அவரால் தொடர் வெற்றி படங்களை கொடுக்க முடியவில்லை. ஒரு வெற்றிப்படம் கொடுத்தால் மூன்று, நான்கு படங்கள் சறுக்கி விடுகிறது.
கார்த்தி நடிப்பில் வெளிவந்த ஜப்பான், வா வாத்தியார், மெய்யழகன் போன்ற படங்கள் தோல்வி படங்களாக அமைந்தது. அதேபோல் சமீபத்தில் வெளியான சர்கார் 2 திரைப்படமும் வெற்றிப்படமாக அமையவில்லை.
இந்நிலையில், இது தொடர்பாக கருத்து தெரிவித்த பிரபல சினிமா பத்திரிக்கையாளர் மற்றும் வலைப்பேச்சி பிஸ்மி ‘ கார்த்தியின் சரிவுக்கு அவரே முக்கிய காரணம்.. சூர்யாவும் கார்த்தியும் தங்களது நட்பு வட்டத்தை மிகவும் சுருக்கி கொண்டார்கள். வெளி நபர்கள் யாருடனும் பழகுவதில்லை..

சொந்த தயாரிப்பு: மேலும் கார்த்தி தொடர்ந்து அவர்களின் சொந்த பேனர்களில் மட்டுமே நடிக்கிறார். ஒன்று அந்த படத்தை சூர்யா தயாரிக்கிறார். இல்லையெனில் அவரின் உறவினர்களான எஸ்.ஆர்.பிரபு அல்லது ஞானவேல் ராஜா ஆகியோர்தான் தயாரிக்கிறார்கள்.
கார்த்தி இப்போதைய இளம் இயக்குனர்களின் படங்களில் நடிக்க வேண்டும். சினிமாவை கரைத்து குடித்தவர் போல நினைத்துக் கொண்டு எல்லாவற்றையும் செய்கிறார்கள்.. சர்தார் 2 படத்தில் நிறைய லாஜிக் ஓட்டை இருந்தது. அதையெல்லாம் கார்த்தி தடுத்திருக்க வேண்டும்..
அடுத்து அவர் ஒரு படத்தில் நடித்தால் நடிகர் கார்த்திக்கு இது வெற்றி படமாக அமையுமா என்று அவர் யோசிப்பதில்லை.. ஒரு தயாரிப்பாளராக இந்த படத்தில் எவ்வளவு லாபம் கிடைக்கும் என்றுதான் கார்த்தி யோசிக்கிறார்.. அதனால்தான் அவரின் படங்கள் தொடர் தோல்வியை சந்தித்து வருகின்றன’ என்று கூறியிருக்கிறார்.











