எங்க குடும்பத்துல ஜோதிகா எப்படி வாழும்னு நினைச்சேன்!.. சிவக்குமார் ஓப்பன்..
சூர்யா – ஜோதிகா காதல் திருமணம் பற்றி சிவக்குமார் பேட்டி

நடிகர் சூர்யாவும், ஜோதிகாவும் சினிமாவில் வளரும் காலத்தில் ஒன்றாக இணைந்து பல படங்களிலும் நடித்தனர். அப்போது அவர்களுக்கு இடையே நல்ல நட்பு உருவாகி அது காதலாகவும் மாறியது. ஒரு கட்டத்தில் இருவரும் திருமணம் செய்து கொள்ளவும் முடிவெடுத்தனர்.
ஆனால் சிவக்குமார் அவர்களின் காதலை ஏற்கவில்லை. எனவே சில வருடங்கள் காத்திருந்து சிவக்குமாரின் சம்மதத்தை பெற்று இருவரும் திருமணம் செய்து கொண்டனர். இப்போது திரையுலகில் ஒரு முன்னுதாரணமாக அவர்கள் மகிழ்ச்சியான வாழ்க்கையை வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். சமீபத்தில் கூட தங்களின் 20வது திருமண நாளை முன்னிட்டு ஸ்காட்லாந்துக்கு சென்று இரண்டாவது முறையாக அவர்கள் திருமணம் செய்து கொண்டனர்.

இது தொடரான புகைப்படங்களும், வீடியோக்களும் சமூகவலைத்தளங்களில் வெளியாகி லைக்ஸ்களை அள்ளியது. சூர்யா – ஜோதிகா திருமணம் பற்றி ஊடகங்களில் பேசிய சிவக்குமார் ‘நான் ஜோதிகாவைத்தான் திருமணம் செய்து கொள்வேன்.. இல்லையென்றால் திருமணம் செய்து கொள்ளாமல் இருந்து விடுகிறேன்’ என்று சூர்யா சொன்னார். எனவே இது உண்மையான காதல் என்பதை புரிந்து கொண்டு நான் அவர்களுக்கு திருமணம் செய்து வைத்தேன்’. என ஏற்கனவே சிவகுமா கூறியிருந்தார்..
இந்நிலையில், ஊடகம் ஒன்றில் பேசிய சிவக்குமார் ‘ஜோதிகா மும்பை பெண்ணா இருக்கு.. அந்த பொண்ணு எப்படி நம்ம குடும்பத்தோடு சேர்ந்து வாழும் என்று நான் நினைத்தேன்.. ஆனால் அவங்க எங்க கூட 18 வருஷமா ஒன்னதான் வாழ்ந்தாங்க.. இப்ப இருக்குற சில நடிகைகள் கல்யாணம் முடிந்ததும் குழந்தை பெத்துக்க மாட்டாங்க..
ஆனால் ஜோதிகா கல்யாணம் பண்ணி முடிச்சதுமே குழந்தைகளை பெற்றுக் கொண்டு நல்லபடியா வளர்த்து இப்ப மீண்டும் நடிக்க தொடங்கியிருக்காங்க.. முதல் நாள் அவங்க ரெண்டு பேரும் எப்படி காதலித்தார்களோ அதே காதல் 20 வருடம் கழித்து இன்னும் குறையாமல் இருக்கிறது.. இதுவே எங்களுக்கு சந்தோஷம்’ என அவர் கூறியிருக்கிறார்.












