விஜய் சார் கொடுத்த செம கிப்ட்!.. அது என் செண்டிமெண்ட்!.. மாளவிகா மோகனன் நெகிழ்ச்சி..

விஜய் தனக்கு கொடுத்த பரிசு பற்றி மாளவிகா மோகனன் கொடுத்த பேட்டி..

malavika

தொடக்கத்தில் சில மலையாள திரைப்படங்களில் நடித்துவிட்டு தமிழில் கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் ரஜினி, சசிகுமார் நடித்த பேட்ட திரைப்படத்தில் ஒரு முக்கிய நடித்து கோலிவுட்டில் அறிமுகமானவர்தான் மாளவிகா மோகனன்.

அதன்பின் சில படங்களில் அவர் நடித்தாலும் அந்த படங்கள் ரசிகர்களை கவரவில்லை. ஆனாலும், லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய்க்கு ஜோடியாக மாஸ்டர் படத்தில் நடித்திருந்தார். அதேபோல் ரஞ்சித் இயக்கத்தில் சியான் விக்ரம் நடித்த தங்கலான் படத்திலும் ஒரு வித்தியாசமான வேடத்தில் நடித்தார்.

சமீபத்தில் பி.எஸ் மித்ரன் இயக்கத்தில் கார்த்தி நடித்து வெளியான சர்தார் 2 திரைப்படத்திலும் மாளவிகா மோகனன் ஒரு முக்கிய வேடத்தில் நடித்திருந்தார். ஆனால் இந்த படம் பாக்ஸ் ஆபிஸில் ஹிட் அடிக்கவில்லை..

இந்நிலையில், ஊடகம் ஒன்றில் பேசிய மாளவிகா மோகனன் ‘என்னிடம் ஒரே ஒரு வாட்ச் மட்டுமே இருக்கிறது.. பொதுவாக நான் வாட்ச்கள் வாங்குவதில்லை.. ஆனால் என்னிடம் இருக்கும் அந்த ஒரு வாட்ச் விஜய் சார் எனக்கு பரிசாக கொடுத்தது அவர் எனக்கு ஒரு RADO வாட்ச் ஒன்றை பரிசாக வழங்கினார். அந்த வாட்ச் எனக்கு மிகவும் செண்டிமெண்டலான மதிப்பு கொண்டது’ என தெரிவித்திருக்கிறார்.

CR
ஆசிரியர்

சிவா

முருகன். இவர் டிஜிட்டல் செய்தி துறையில் துறையில் 12 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். குறிப்பாக இணையதள செய்தி பிரிவில் பணியாற்றியவர். சினிமா, அரசியல் மற்றும் விளையாட்டு சார்ந்த செய்திகள் வழங்குவதில் ஆர்வம் உள்ளவர். இந்த தளத்தில் கடந்த 10 ஆண்டுகளாக செய்தி ஆசிரியராக பணியாற்றி வருகிறார். மின் அஞ்சல் முகவரி [email protected]

மேலும் →

சமீபத்திய சினிமா செய்திகள்

அனைத்தும் →