என் காலையே சுத்திக்கிட்டு இருக்காத!.. விஜய்க்கு அட்லி சொன்ன அட்வைஸ்!..
இயக்குனர் அட்லிக்கு விஜய் சொன்ன அறிவுரை..

ராஜா ராணி திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமானவர் அட்லி. இவர் பிரமாண்ட இயக்குனர் ஷங்கரிடம் உதவி இயக்குனராக பணிபுரிந்தவர். எனவே, ஷங்கரை போலவே அட்லியும் அதிக பட்ஜெட் படங்களை எடுத்து வருகிறார். நண்பன் படத்தில் நடித்தபோது அட்லியுடன் பழக்கம் ஏற்பட்டதாலும்,
ராஜா ராணி படம் பிடித்திருந்ததாலும் விஜய் அட்லீஷியை கூப்பிட்டு அவருக்கு ஒரு பட வாய்ப்பு கொடுத்தார்.
அப்படி உருவான தெறி திரைப்படம் விஜய்க்கு முக்கிய படமாக அமைந்தது. அட்லியின் இயக்கம் விஜய்க்கு பிடித்திருந்தால் அவரது இயக்கத்தில் மெர்சல், பிகில் ஆகிய படங்களில் நடித்தார். அந்த அனைத்து படங்களுமே வெற்றி பெற்றது.. அதன்பின் பாலிவுட்டுக்கு போன அட்லி ஷாருக்கானை வைத்து ஜவான் படத்தை இயக்கினார். இந்த படம் 1300 கோடி வசூலை அள்ளியது. எனவே, இந்திய அளவில் அட்லி முக்கியமான இயக்குனராக மாறியிருக்கிறார்.
தற்போது அல்லு அர்ஜுனனை வைத்து ராக்கா என்கிற திரைப்படத்தை அட்லி இயக்கி வருகிறார். இந்த திரைப்படம் ஒரு பேன் இண்டியா படமாக உருவாகி வருகிறது. இந்நிலையில், விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகியுள்ள பத்தா திரைப்படத்தின் விழாவில் நேற்று பேசிய இயக்குனர் அட்லி ‘நான் போட்டுருக்க சட்டை, பேண்ட் எல்லாமே என் உழைப்புல கிடைச்சது என்றாலும் என் அண்ணன் தளபதி இல்லனா இதுக்கு வாய்ப்பே இல்லை..
நான் ராஜா ராணி பண்ணி கொஞ்சம் பேமஸ் ஆகியிருந்தேன்.. ஆனா தளபதிதான் அடுத்தடுத்து படம் கொடுத்து எனக்கு வாழ்க்கையை கொடுத்தார்.. பாலிவுட் போய் ஷாருக்கான் படம் பண்ணதுக்கும் அவர்தான் காரணம்.. என் காலையிலேயே சுத்திட்டு இருக்காத.. அந்த படத்தை நீ பண்ணியே ஆகணும்.. அந்த படம் உன் வாழ்க்கையே மாத்திடும்’ என்று சொல்லி எனக்கு நம்பிக்கை கொடுத்தது அவர்தான்’ என பேசியிருக்கிறார்.











