யார் என்ன சொன்னாலும் விஜய்தான் மாஸ்!.. விஜய் சேதுபதிக்கு மேடையிலேயே பதிலடி கொடுத்த அட்லி!…
விஜயை பற்றி இயக்குனர் அட்லி சொன்னது..

சில நாட்களுக்கு முன்பு பிக்பாஸ் நிகழ்ச்சியில் பேசிய அந்நிகழ்ச்சியின் தொகுப்பாளர் விஜய் சேதுபதி லீடர்சிப் குவாலிட்டி பற்றி பேசிய சில கருத்துக்கள் விஜய் ரசிகர்களையும், தவெக ஆதரவாளர்களையும் கோபப்படுத்தியது. இதையடுத்து சமூகவலைத்தளங்களில் விஜய் சேதுபதிக்கு எதிராக அவர்கள் கருத்துக்களை முன் வைத்தனர்.
சிலரோ மிகவும் பர்சனலாக விஜய் சேதுபதியை அட்டாக் செய்தனர். கடந்த ஆட்சியின் போது வாயை மூடிக்கொண்டிருந்தார் என்றெல்லாம் சொன்னார்கள். ஆனால் விஜய் சேதுபதி இது குறித்து எதுவும் வாய் திறக்கவில்லை. ஆனால் இது தொடர்பாக விளக்கமளித்த விஜய் டிவி நிர்வாகம் ‘இது முழுக்க முழுக்க நிகழ்ச்சி தொடர்பானது மட்டுமே.. வேறு ஒருவருடன் சம்பந்தப்படுத்தி பார்க்கக்கூடாது’ என கூறியது..

ஆனாலும் விஜய் ரசிகர்களும், தவெக ஆதரவாளர்களும் அதை ஏற்கவில்லை. இந்நிலையில்தான் விஜய் சேதுபதி நடித்துள்ள பத்தா பட விழாவில் பேசிய இயக்குனர் அட்லி ‘சோசியல் மீடியாவின் வலையில் சிக்கி விடாதீர்கள்.. அவர் இதை சொல்கிறார். இவர் அவரை சொல்கிறார் என்றெல்லாம் பேசுகிறார்கள்.. அப்படியெல்லாம் எதுவும் இல்லை.. எதை சொன்னாலும் நேரடியாகவே சொல்லலாம்.
தற்போது 5 வயது குழந்தையை கூட சட்டசபை நிகழ்ச்சிகளை நேரலையில் பார்க்கிறது.. அதற்கு காரணம் விஜய் அண்ணன்தான். எழுதி வைத்துக் கொள்ளுங்கள் எதிர்காலத்தில் இளைய தலைமுறை அரசியலு அதிகம் வருவார்கள்.. அதற்கு முக்கிய காரணமாக விஜய் அண்ணா இருப்பார்.. ஒரு பெரிய மாற்றத்தை அவர் ஏற்படுத்தியுள்ளார். அரசியல் நமக்கானது அல்ல என்று பேசுகிறார்கள்.. அது தவறு.. அரசியல் எல்லோருக்குமானது.. எல்லோரும் அரசியலில் ஈடுபட வேண்டும்’ என்று அவர் பேசியிருக்கிறார்.












