விஜய் எனக்கு போன் பண்ணார்!.. அவர் நல்ல மனுஷன்!.. விஜய் சேதுபதி சொல்லிட்டாரே!..

பத்தா பட விழாவில் விஜய் சேதுபதி பேச்சு..

vijay sethupathi

தமிழக முதலமைச்சராக விஜய் இருக்கும் நிலையில் சில நாட்களுக்கு முன்பு பிக்பாஸ் நிகழ்ச்சியில் பேசிய விஜய் லீடர்சிப் குவாலிட்டி பற்றி பேசிய சில விஷயங்கள் விஜய் ரசிகர்களை கோபப்படுத்தியது. இதையடுத்து, ‘கடந்த ஐந்து வருட திமுக ஆட்சியில் விஜய் சேதுபதி எதுவும் பேசவில்லை.. அவர் திமுகவின் ஆதரவாளர்.. அதனால்தான் விஜயை மறைமுகமாக விமர்சித்து பேசியிருக்கிறார்’ என தவெக ஆதரவாளர்களும், தவெக நிர்வாகிகளும் சமூக வலைத்தளங்களில் பேசினார்கள்.

விஜய் சேதுபதிக்கு கட்டம் சரியில்லை என தவெக எம்.எல்.ஏ கனிமொழி சந்தோஷ் பேட்டி கொடுத்தார். ஆனால் விஜய் சேதுபதி யாரையும் மனதில் நினைத்து பேசவில்லை. அது முழுக்க முழுக்க நிகழ்ச்சி தொடர்பாக மட்டுமே’ என விஜய் டிவி நிர்வாகம் விளக்கமளித்தது.

இந்நிலையில், நேற்று சென்னையில் நடைபெற்ற பத்தா பட விழாவில் பேசிய விஜய் சேதுபதி ‘சில வருடங்களுக்கு முன்பு ஜேசன் சஞ்சய்க்கு நான் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்தேன்.. அப்போது விஜய் சார் என்னை போனில் கூப்பிட்டு ‘நன்றி நண்பா’ என சொன்னார். அவர் எவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டார்.. அவர் அதை செய்திருக்க வேண்டிய அவசியம் இல்லை. ஜேசனுக்கு என்னை மிகவும் பிடிக்கும் எனவும் அவர் என்னிடம் கூறினார்.

ஒருமுறை ஜேசனை பார்த்தபோது ‘உங்க வீட்டில் அவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டார் இருக்கும்போது என்னை உனக்கு பிடிக்குமா?’ என கேட்டேன். முதல்வர் விஜய் மிகவும் இனிமையான மற்றும் அன்பான மனிதர்’ என அவர் பேசினார்.

CR
ஆசிரியர்

சிவா

முருகன். இவர் டிஜிட்டல் செய்தி துறையில் துறையில் 12 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். குறிப்பாக இணையதள செய்தி பிரிவில் பணியாற்றியவர். சினிமா, அரசியல் மற்றும் விளையாட்டு சார்ந்த செய்திகள் வழங்குவதில் ஆர்வம் உள்ளவர். இந்த தளத்தில் கடந்த 10 ஆண்டுகளாக செய்தி ஆசிரியராக பணியாற்றி வருகிறார். மின் அஞ்சல் முகவரி [email protected]

மேலும் →

சமீபத்திய சினிமா செய்திகள்

அனைத்தும் →