நான் விஜயை பேசவே இல்ல!.. சொன்னா புரிஞ்சிக்குங்க!.. விஜய் சேதுபதி விளக்கம்!..
சில நாட்கள் முன்பு பிக் பாஸ் நிகழ்ச்சியில் பேசிய நிகழ்ச்சியின் தொகுப்பாளர் விஜய் சேதுபதி வாய்க்கு வந்தபடி வாக்குறுதிகளை அள்ளி வீசிவிட்டு பிரச்சனை, பொறுப்பு என வரும்போது எதிரணியின் மீது பழியை தூக்கி போட்டுவிட்டு தெறித்து ஓடுவது ஒரு தலைமை பண்புக்கான தகுதி இல்லை.. அது ஏமாற்றும் வேலை’ என பேசியிருந்தார். பிக்பாஸ் வீட்டில் சட்டசபை போல ஒரு செட்டப்பை உருவாக்கி அதில் ஆளும் அணி, எதிரணி என பிரிக்கப்பட்டு போட்டியாளர்களுக்கு ஒரு டாஸ்க் கொடுக்கப்பட்டது. அந்த […]

சில நாட்கள் முன்பு பிக் பாஸ் நிகழ்ச்சியில் பேசிய நிகழ்ச்சியின் தொகுப்பாளர் விஜய் சேதுபதி வாய்க்கு வந்தபடி வாக்குறுதிகளை அள்ளி வீசிவிட்டு பிரச்சனை, பொறுப்பு என வரும்போது எதிரணியின் மீது பழியை தூக்கி போட்டுவிட்டு தெறித்து ஓடுவது ஒரு தலைமை பண்புக்கான தகுதி இல்லை.. அது ஏமாற்றும் வேலை’ என பேசியிருந்தார்.
பிக்பாஸ் வீட்டில் சட்டசபை போல ஒரு செட்டப்பை உருவாக்கி அதில் ஆளும் அணி, எதிரணி என பிரிக்கப்பட்டு போட்டியாளர்களுக்கு ஒரு டாஸ்க் கொடுக்கப்பட்டது. அந்த டாஸ்க் தொடர்பாக பேசும்போதுதான் விஜய் சேதுபதி அப்படி ஒரு கருத்தை தெரிவித்தார்..
ஆனால் தமிழக முதல்வர் ஜோசப் விஜயை மனதில் நினைத்து அவரைத்தான் மறைமுகமாக விமர்சித்திருக்கிறார் என விஜய் ரசிகர்களும், தவெகவினரும் கோபமடைந்தனர். எனவே, விஜய் சேதுபதியை அவர்கள் கடுமையாக திட்ட துவங்கினர். சில தவெக எம்.எல்.ஏக்களும் விஜய் சேதுபதிக்கு எதிராக கருத்து தெரிவித்தனர்..
இந்நிலையில்தான், இந்த வார பிக் பாஸ் நிகழ்ச்சியில் விஜய் சேதுபதி அதற்கு விளக்கம் கொடுத்திருக்கிறார். இந்த மேடையில் பேசப்படும் கருத்துக்கள் அனைத்தும் இந்த வீட்டில் உள்ள போட்டியாளர்களுக்கும் எங்களுக்கு மட்டுமே சொந்தமானவை. வெளியில் இருக்கும் எந்த நபரைரோ அல்லது அமைப்பையோ சார்ந்து குறிப்பிடவில்லை என்பதை திட்டவட்டமாக தெரிவித்துக் கொள்கிறோம்.
இதைப்பற்றி ஏற்கனவே புரிந்திருக்கும் என்று நினைத்தேன்.. ஆனால் கடந்த வாரமே இதை சொல்லியிருக்க வேண்டும்.. இப்போது சொல்ல வேண்டிய அவசியமாகிவிட்டது’ என அவர் கூறியிருக்கிறார்.












