Cinema History
ரஜினி பட வசனத்தை பேசி அப்பாவிடம் வாய்ப்பு கேட்ட விஜய்!.. இவ்வளவு நடந்திருக்கா!…
நடிகர் விஜய் அப்பாவின் மூலம் சினிமாவுக்கு வந்தவர். சிறு வயதில் அப்பா இயக்கிய படங்களில் சின்ன சின்ன வேடங்களில் நடித்திருக்கிறார். டீன் ஏஜை எட்டியதும் தனது கேரியர் சினிமாதான் என்பதை முடிவு செய்தார். ஆனால், அதற்கு இப்போது அவசரம் இல்லை. முதலில் கல்லூரி படிப்பை முடி என சொல்லி சென்னை லயோலா கல்லூரியில் சேர்த்துவிட்டார் அவரின் அப்பா எஸ்.ஏ.சி.
அது விஸ்வல் கம்யூனிகேஷன் என்பதால் ஆர்வமாக படித்தார் விஜய். அதன்பின் நாளைய தீர்ப்பு என்கிற படம் மூலம் சினிமாவில் நடிக்க துவங்கினார். இந்த படம் படுதோல்வி. அதன்பின் ரசிகன், விஷ்ணு, தேவா, செந்தூரப்பாண்டி, செல்வா என தொடர்ந்து படங்களில் நடித்து ரசிகர்களிடம் பிரபலமானார்.
இதையும் படிங்க: விஜய் 69-ஐ இயக்கப்போவது அந்த இயக்குனரா?! என்னப்பா டிவிஸ்ட்டுக்கு மேல டிவிஸ்ட்டா இருக்கு!.
விஜயின் நடிப்பை பற்றி யாரும் பேசவில்லை என்றாலும் அவரின் நடனத்திறமை இளசுகளுக்கு பிடித்திருந்தது. பூவே உனக்காக படம் அவருக்கு முக்கிய படமாக அமைந்தது. அதன்பின் பல காதல் கதைகளில் நடித்தாலும் ஒருகட்டத்தில் ஆக்ஷன் படங்களில் நடிக்க துவங்கி தனக்கென ரசிகர் கூட்டத்தை உருவாக்கினார்.
இளைய தளபதி எனும் ரசிகர்களால் அழைக்கப்பட்ட விஜய் இப்போது தளபதியாக மாறியிருக்கிறார். இவரின் படங்கள் பல கோடிகள் வசூல் செய்கிறது. ரஜினிக்கு அடுத்து ஒரு இளைய சூப்பர்ஸ்டாராகவும் மாறியிருக்கிறார். வசூலில் ரஜினிக்கு அடுத்து இடத்திற்கு விஜய் எப்போது வந்துவிட்டார்.
இதையும் படிங்க: விஜய் கூட நடிக்க வாய்ப்பு வந்தும் நோ சொல்லிட்டேன்! என்னப் போய் அப்படி நடிக்க சொன்னா? புலம்பும் நடிகை
விஜய் நடிப்புதான் தனது கேரியர் என முடிவு செய்தாலும் அவரின் அப்பா எஸ்.ஏ.சந்திரசேகர் அதற்கு ஒத்துக்கொள்ளவில்லை. கல்லூரி படிப்பை முடிக்கும் முன்பே ‘என்னை சினிமாவில் நடிக்க வையுங்கள்’ என அப்பாவிடம் நச்சரித்துக்கொண்டே இருந்தார். ‘சரி நடிப்பு நடிப்பு என்கிறாயே ஒரு வசனத்தை எனக்கு பேசிக்காட்டு’ என எஸ்.ஏ.சி சொல்லி கேட்டிருக்கிறார்.
அப்போது அண்ணாமலை படத்தில் ‘அசோக்.. உன் டைரியில குறிச்சு வைக்கோ’ என ரஜினி பேசும் வசனத்தை அப்படியே பேசிக்காட்டியிருக்கிறார் விஜய். அதைப்பார்த்த எஸ்.ஏ.சி இனிமேலும் விஜயை தடுக்க முடியாது என நினைத்த பின்னரே அவருக்காக நாளைய தீர்ப்பு எனும் படத்தை எடுத்தார். ரஜினி வசனத்தை பேசிக்காட்டி சினிமாவுக்கு வந்த விஜய் ஒரு கடந்த சில வருடங்களாக ரஜினிக்கே போட்டி நடிகராக மாறியதுதான் வரலாறு.