ஜெயிலர் மருமகளா இது?.. வயித்துப் புள்ளத்தாச்சியா டான்ஸிங் ரோஸ் கூட என்ன பண்றாரு பாருங்க!..

Published on: February 15, 2024
---Advertisement---

சார்பட்டா பரம்பரை படத்தில் டான்ஸிங் ரோஸாக நடித்து ரசிகர்களை கவர்ந்தவர் தான் ஷபீர் கல்லரக்கல். திரிஷாவின் ரோடு, ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் உள்ளிட்ட படங்களில் தொடர்ந்து மிரட்டி வரும் அவர் அடுத்து நடித்துள்ள பர்த்மார்க் திரைப்படத்தின் டிரெய்லர் தற்போது வெளியாகி உள்ளது.

நெல்சன் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் ரொம்ப ஆண்டுகளுக்குப் பிறகு ஹிட் அடித்த ஜெயிலர் படத்தில் மருமகளாக நடித்த மலையாள நடிகை மிர்ணா இந்த படத்தில் கர்ப்பிணிப் பெண்ணாக ஷபீருக்கு ஜோடியாக நடித்துள்ளார்.

இதையும் படிங்க: ஐயோ ஹார்ட் பீட்டு எக்கு தப்பா எகிறுது!.. சைனிங் உடம்பை காட்டி தூக்கத்தை கெடுக்கும் ஸ்ருதிஹாசன்..

இந்த படத்தில் வில்லனே ஹீரோ ஷபீர் தான் என்பது தான் படத்தின் டிரெய்லரை பார்த்தவர்களுக்கு பகீர் கிளப்பும் விதமாக அமைந்துள்ளது.  விக்ரம் ஸ்ரீதரன் என்பவர் இயக்கத்தில் தமிழில் உருவாகி உள்ள இந்த படம் வரும் பிப்ரவரி 23ம் தேதி வெளியாகிறது.

அடுத்தவாரம் வெளியாக உள்ள இந்த படத்தின் டிரெய்லர் தற்போது தான் வெளியாகி இருக்கிறது. திருமணமான தனது மனைவியை குழந்தை பெற்றுக் கொள்வதற்காக தனியாக ஒரு காடு போன்ற பகுதிக்கு அழைத்து செல்லும் ஷபீர் அவரையும் அவரது கருவையும் அழிக்க பல கட்ட முயற்சிகளை செய்வதும் அதிலிருந்து மிர்ணா எப்படி தப்பிக்கிறார் என்கிற கதையை அடிப்படையாகக் கொண்டு இந்த பர்த் மார்க் திரைப்படம் உருவாகி உள்ளது.

இதையும் படிங்க: ரஜினி பட வசனத்தை பேசி அப்பாவிடம் வாய்ப்பு கேட்ட விஜய்!.. இவ்வளவு நடந்திருக்கா!…

டிரெய்லரே செம த்ரில்லராகவும் வித்தியாசமாகவும் உள்ள நிலையில், படம் ரசிகர்களுக்கு புது அனுபவத்தைக் கொடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Saranya M

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.