கேப்டனை போல் பல இயக்குனர்களின் வாழ்க்கையில் ஒளியேற்றி வைத்த முரளி! அதில் ஒரு சம்பவம் இதோ

Published on: February 17, 2024
murali
---Advertisement---

Actor Vijayakanth: விஜயகாந்தை பற்றி பல செய்திகள் நாள்தோறும் நாம் பார்த்த வண்ணம் இருக்கிறோம். ஏகப்பட்ட உதவிகளை செய்திருக்கிறார், வயிறார சாப்பாடு போட்டிருக்கிறார், இல்லை என வருவோர்க்கு வாரி வாரி வழங்கும் கொடைத்தன்மை படைத்தவர் என எத்தனையோ விஷயங்கள் விஜயகாந்தை பற்றி உலா வந்து கொண்டே இருக்கின்றன.

அதுமட்டுமில்லாமல் பல இயக்குனர்களுக்கு வாழ்வை கொடுத்தவர் விஜயகாந்த். எத்தனையோ இயக்குனர்களின் வாழ்க்கையில் ஒளியேற்றியும் வைத்திருக்கிறார். இவரை போலவே நடிகர் முரளியும் பல இயக்குனர்களின் வாழ்க்கையில் ஒளியேற்றி வைத்திருக்கிறார் என எத்தனை பேருக்கு தெரியும். மணிரத்னம், விக்ரமன், சேரன், கதிர் உள்ளிட்ட பலர் இதில் அடங்குவர்.

இதையும் படிங்க: சூப்பர்ஸ்டார் ஆக்கிய நண்பரை இரண்டு படத்தில் நடிக்க வைத்த ரஜினிகாந்த்… ஹிட் படத்தில் வரது இவர்தானா?

முரளியின் தந்தை கன்னட உலகில் மிகப்பெரிய தயாரிப்பாளர்.இருந்தாலும் தன் சொந்த முயற்சியாலும் உழைப்பாலும் முரளி சினிமாவிற்குள் வந்தார். சேரன் இயக்கத்தில் முரளி நடித்த படம் வெற்றிகொடி கட்டு. இந்தப் படம் உருவாக காரணமாக இருந்ததே முரளிதானாம். சேரன் இயக்கிய தேசிய கீதம் படத்தால் பல பிரச்சினைகள் எழ அதிலிருந்து கிட்டத்தட்ட ஒரு வருஷம் சேரன் எந்த வாய்ப்பும் இல்லாமல் இருந்திருக்கிறார்.

இந்த நிலைமையில் முரளி சேரனை அழைத்து சிவசக்தி பாண்டியனிடம் சென்றிருக்கிறார். அவரிடம் சேரனின் நிலைமையை எடுத்துக் கூறி வெற்றி கொடி கட்டு படத்தை இயக்கும் வாய்ப்பை வாங்கிக் கொடுத்தாராம் முரளி.

இதையும் படிங்க: கலைஞரை எதிர்த்து சேரன் எடுத்த படம்! என்ன செய்தார் தெரியுமா கலைஞர்? ஒரு வருசத்திற்கு பொழப்பே போச்சு

அதன் பின் நானும் பார்த்திபனும் நடித்தால் எப்படி இருக்கும் என முரளி கேட்க நன்றாக இருக்கும் என சேரன் சொல்லியிருக்கிறார். இது பார்த்திபனுக்கும் தெரியவர சேரனிடம் பார்த்திபன் அவரது பாணியில் ‘ நானும் முரளியும் சேரனும்’ என்று கூறினாராம்.

அதன் பின் சேரனின் படங்களில் வடிவேலுவின் காமெடி ஒர்க் அவுட் ஆக இந்தப் படத்திலும் வடிவேலுவை கமிட் செய்திருக்கிறார் சேரன். அதுவரை சிங்கிள் ஹீரோ சப்ஜெக்ட் படங்களையே எடுத்து வந்த சேரன் இந்தப் படத்தில் டபுள் ஹீரோ சப்ஜெக்ட் வைத்து படத்தை உருவாக்கியிருக்கிறார். அதன் பின் வெற்றி கொடி கட்டு திரைப்படம் வெற்றிப்படமாக மாறியிருக்கிறது என சேரன் கூறினார்.

இதையும் படிங்க: நம்ம ரஜினி மருமகளா இது?!.. நகைக்கடை பொம்மை போல ஜொலிக்கிறாரே!.. வைரல் புகைப்படங்கள்!..

Rohini

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.