லியோ படத்தில் இருந்த அந்தவொரு கேரக்டர் கோட் படத்திலேயும் இருக்காம்!.. யாரு நடிக்கிறா தெரியுமா?

Published on: February 18, 2024
---Advertisement---

நடிகர் விஜய் சிறு வயதிலேயே தனது தங்கை வித்யாவை இழந்து விட்டார். கில்லி படத்தில் அரிசி மூட்டை புவனா என ஒரு தங்கை கேரக்டரை இயக்குநர் வைத்து விஜய்யை கண் கலங்க வைத்து விட்டார்.

அதன் பின்னர் திருப்பாச்சி, வேலாயுதம் என பல படங்களில் விஜய்க்கு ஒரு தங்கச்சி கேரக்டரை இயக்குநர்கள் வைத்து படத்தை இயக்கும் வாய்ப்புகளை பெற்று விட்டார்கள் என்றே சொல்லலாம். கடைசியாக லியோ படத்திலும் நடிகர் விஜய்க்கு மடோனா செபாஸ்டியனை தங்கையாக லோகேஷ் கனகராஜ் நடிக்க வைத்திருப்பார்.

இதையும் படிங்க: நான் பாடுனாதான் காசு!.. இசை யூனியன் சரியா நடக்கல.. ஓட்டுப் போட்ட பின்னர் வேட்டு வச்ச மனோ!..

அப்பாவால் தங்கை இறந்து விட்டார் எனக் காட்டியது எஸ்.ஏ. சந்திரசேகருக்கு பிடிக்காமல் போய் அவர் கடுமையாக விமர்சித்ததற்கு அதுவும் ஒரு காரணம் என்கின்றனர். ஆனால், அதுதான் விஜய்யை லைக் செய்ய வைத்தது என்றும் கூறுகின்றனர்.

இந்நிலையில், வெங்கட் பிரபுவுக்கும் விஜய்க்கு ஒரு தங்கை கதாபாத்திரத்தை தரமாக இறக்கி இருக்கிறாராம். விஜய் அப்பா மற்றும் மகன் என இரு ரோல்களில் நடித்து வருகிறார். மகன் விஜய்க்கு தங்கையாக ஒளிப்பதிவாளர் மணிகண்டனின் மகள் அபியுக்தா நடித்து வருகிறார் என்கிற தகவல் தற்போது கசிந்துள்ளது. இதுவரை 15 நாட்களுக்கு மேல் விஜய்யுடன் காம்பினேஷன் சூட்டிங்கில் அவரும் நடித்துள்ளாராம். படத்தில் அவருக்கு மிகவும் முக்கியமான கதாபாத்திரம் எனக் கூறப்படுகிறது.

இதையும் படிங்க: சைரன் நாயகியின் 28வது பிறந்தநாள்!.. எங்கே கொண்டாடி இருக்காரு பாருங்க.. ரசிகர்களுக்கு செம ட்ரீட்!..

மாடல் அழகியாகவும் சிறந்த பரதநாட்டிய கலைஞருமான அபியுக்தாவை தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம் படத்தில் வெங்கட் பிரபு போட்டுத்தள்ளாமல் இருக்கணும்!

Saranya M

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.