உங்க அப்பன் வீட்டு காசா? ரஜினி , கமலே கேட்காத போது அஜித் செஞ்ச வேலைய பாருங்க.. இதெல்லாம் யாருக்கு தெரியும்?

Published on: February 19, 2024
rajini
---Advertisement---

Actor Ajith: அஜித்துக்கு இது போதாத காலம் என்றுதான் சொல்லவேண்டும். அதுவும் விஜயகாந்த் இறப்பு அவரை பெருமளவு பாதித்திருக்கிறது. ஒட்டுமொத்த ரசிகர்களும் அஜித்தை வசைபாடி வருகின்றனர். தமிழ் சினிமாவில் ஒரு ஆகச்சிறந்த நடிகராக இருந்தவர் விஜயகாந்த்.

அனைவரின் அபிமானங்களையும் ஒருங்கே பெற்றவர். யாரை பற்றியும் குறை சொல்லாதவர். எல்லாருக்கும் நல்லதே நினைப்பவர். நல்லதே செய்தவர். இதனாலேயே தமிழகம் முழுவதும் விஜயகாந்துக்கு ரசிகர்களாக இருந்தார்கள். அப்படிப்பட்ட மனிதரின் இறப்பிற்குக் கூட வரவில்லையே அஜித் என அனைவரும் அஜித் மீது அதிர்ப்தியில் இருக்கின்றனர்.

இதையும் படிங்க: கோட் திரைப்படத்தில் விஜயிற்கு வில்லனாகும் ’சூப்பர்ஸ்டார்’… கோட் படத்தின் ஆச்சரிய அப்டேட்கள்

ஒரு வேளை அவர் சூழ்நிலை அப்படியாக கூட இருக்கலாம். ஆனால் விஜயகாந்த் இறந்து இரண்டு நாள்களில் அவர் டான்ஸ் ஆடும் வீடியோ வெளியாகி அனைவரையும் ஆச்சரியத்தில் உறைய வைத்தது. அதிலிருந்தே அவர் மீது அனைவரும் வன்மத்தை கக்க தொடங்கினார்கள். சமீபத்தில் வெற்றித்துரைச்சாமியின் மறைவிற்கு வந்தும் கூட விஜயகாந்த் சமாதிக்கு போய் அஞ்சலி செலுத்தவில்லை அஜித்.

இந்த நிலையில் வலைப்பேச்சு அந்தனன் அஜித்தை பற்றி சீறிப்பாய்ந்திருக்கிறார். ஒட்டுமொத்த ரசிகர்களும் அஜித்தை புறக்கணிங்கள் என்றெல்லாம் கூறியிருக்கிறார். அவர் என்ன செய்தாலும் செய்யாவிட்டாலும் அவரை சுற்றி இருக்கும் ரசிகர்களால்தான் இன்னும் அவர் நடவடிக்கைகள் மோசமாகிக் கொண்டே போய்கின்றன. அதனால் அவரை புறக்கணிப்போம் என்றெல்லாம் கூறிவருகிறார்.

இதையும் படிங்க: தனக்கு வாழ்க்கை கொடுத்த பிரபல இயக்குனரை அசிங்கப்படுத்திய அஜித்… ஆனா இப்படிலாமா பேசுவீங்க?

மேலும் ஒரு விஷயத்தை அந்தனன் கூறினார். தமிழ் சினிமாவிலேயே டப்பிங்கிற்குக் கூட கேரவன் வேண்டும் என கூறி வரவழைத்த ஒரே நடிகர் அஜித்தானாம். ரஜினி, கமல், விஜய், சிவகார்த்திகேயன் கூட டப்பிங் அறையில் ஏசி, மற்ற வசதிகளை பயன்படுத்திக் கொள்கிறார்களாம். ஆனால் அஜித் மட்டும்தான் டப்பிங்கிற்கு கேரவனை வரவழைத்திருக்கிறாராம்.

இது என்ன அவர் வீட்டு பணமா? தயாரிப்பாளர் பணம்தான் என்ற எண்ணம்தான் அஜித்தை இந்த மாதிரியெல்லாம் செய்ய வைக்கிறது என வலைப்பேச்சு அந்தனன் கூறினார்.

இதையும் படிங்க: நாட்டுச்சரக்கு நச்சின்னுதான் இருக்கு!.. ஐஸ்வர்யா ராஜேஷை ஏடாகூடமா ரசிக்கும் புள்ளிங்கோ!..

Rohini

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.