
Cinema News
கட்டி வச்சி அடிச்ச எம்ஜிஆர்! ஷாக்கான ஜெயலலிதா!. சந்திரபாபுவுக்கு எதிரே நடந்த சம்பவம்!..
Published on
By
Actor MGR: தமிழ் சினிமாவில் பெரிய ஆளுமையாக இருந்தவர் புரட்சித்தலைவர் எம்ஜிஆர். அரசியலிலும் சரி சினிமாவிலும் சரி போற்றத்தக்க மனிதராக இருந்தார். மிகப்பெரிய மக்கள் செல்வாக்குடன் வலம் வந்த எம்ஜிஆர் மீது அனைவரிடமும் பயம் கலந்த மரியாதையே இருந்து வந்தது.
அனைவருக்கும் நல்லதே செய்ய வேண்டும் என்று எண்ணினாலும் அவர் அருகே செல்ல பயந்தவர்களும் உண்டு. அந்தளவுக்கு தவறு நடக்கும் இடத்தில் முதல் ஆளாக குரல் கொடுப்பவர். தண்டனையையும் கொடுப்பவர் எம்ஜிஆர். பெரும்பாலும் ராமாவரம் தோட்டத்திற்கு வரவழைத்து எம்ஜிஆர் அடிப்பார் என்ற செய்திகளும் நம் காதுகளில் விழுந்ததும் உண்டு.
இதையும் படிங்க: காட்ஃபாதர் ஸ்டைலில் சிவாஜி நடிக்கவிருந்த படம்!.. கடைசி நேரத்தில் எஸ்கேப் ஆன கமல்!..
இந்த நிலையில் நடிகர் சந்திரபாபுவின் சகோதரர் ஒருவர் சமீபத்தில் ஒரு பேட்டியில் சந்திரபாபுவுக்கும் எம்ஜிஆருக்கும் இடையே இருந்த அந்த பழக்கத்தை பற்றி கூறியிருக்கிறார். அதாவது ஒரு படப்பிடிப்பு இடைவெளியில் எம்ஜிஆருக்கு மீன் குழம்பு பொறித்த மீன் வரவழைக்கப்பட்டதாம். இந்தப் பக்கம் சந்திரபாபுவுக்கு கோழிக்குழம்பு வந்ததாம். அப்போது எம்ஜிஆர் ஒரு பெரிய மீனை எடுத்து சந்திரபாபுவின் வாயில் ஊட்டினாராம்.
அதே போல் சந்திரபாபுவும் கோழிக் கறியை எடுத்து எம்ஜிஆர் வாயில் ஊட்டினாராம். பொதுவாக கறி சாப்பிடும் போது அனைவரும் செய்யும் ஒரு பழக்கம் பல் இடுக்களில் கறி மாட்டிக் கொண்டால் கையை வாயினுள் வைத்து எடுப்பது உண்டு. அதே போல் எம்ஜிஆர் செய்ய அதை பார்த்ததும் சந்திரபாபு ‘ச்ச stupid.. dirty’ என அவர் ஆங்கில பாணியில் கூறியிருக்கிறார். இதை கேட்டதும் அருகே சாப்பிட்டுக் கொண்டிருந்த ஜெயலலிதா அப்படியே ஷாக் ஆகி உட்கார்ந்து விட்டாராம்.
இதையும் படிங்க: அஜித்தை சீண்டவே முடியாது.. விஜயகாந்த் பார்த்து ரசித்த ஆளு அஜித்! பிரபலம் சொன்ன புது தகவல்
ஆனால் எம்ஜிஆர் ‘ என்ன சொன்ன?’ என எதார்த்தமாக கேட்டு அப்படியே விட்டுவிட்டாராம். ஆனால் அந்த நேரத்தில் எம்ஜிஆர் மட்டும் கோபப்பட்டிருந்தால் கண்டிப்பாக சந்திரபாபுவுக்கு அடி விழுந்திருக்கும் என அந்த சகோதரர் கூறினார். ஆனால் ஒரு சமயம் ஒரு பத்திரிக்கையாளர் வி.என். ஜானகியை பற்றி தவறுதலாக எழுதியிருக்கிறார். முதல் கணவரை விட்டு எம்ஜிஆருடன் சேர்ந்து விட்டார் என்றெல்லாம் மோசமாக எழுதினாராம்.
இதை பார்த்த எம்ஜிஆர் அந்த பத்திரிக்கையாளரை படப்பிடிப்பிற்கே வரவழைத்து அவரை கட்டி வைத்து அடித்ததாகவும் அப்போது அருகே இருந்த சந்திரபாபுதான் எம்ஜிஆரை தடுத்து நிறுத்தியதாகவும் அதன் பின் அந்த பத்திரிக்கையாளரை கடுமையாக கண்டித்து எம்ஜிஆர் அனுப்பியதாகவும் சந்திரபாபுவின் சகோதரர் கூறினார்.
இதையும் படிங்க: அஜித்தை சீண்டவே முடியாது.. விஜயகாந்த் பார்த்து ரசித்த ஆளு அஜித்! பிரபலம் சொன்ன புது தகவல்
Bison: நடிகர் விக்ரமின் மகனும் நடிகருமான துருவ் விக்ரம் நடிப்பில் அனைவரும் எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் திரைப்படம் பைசன். இந்த படம் அக்டோபர்...
Simbu-Dhanush: தமிழ் சினிமாவில் ரஜினி, கமல், விஜய், அஜித் வரிசையில் அடுத்த இரட்டை போட்டியாளர்களாக பார்க்கப்பட்டவர்கள் சிம்புவும் தனுஷும். சிம்பு குழந்தை...
SMS: கடந்த 2009 ஆம் ஆண்டு ராஜேஷ் இயக்கத்தில் வெளியான திரைப்படம்தான் சிவா மனசுல சக்தி. இந்தப் படத்தில் ஜீவா நாயகனாக...
கோமாளி படம் மூலம் இயக்குனராக களமிறங்கி முதல் படத்திலேயே ஹிட் கொடுத்தவர் பிரதீப் ரங்கநாதன். அந்த படத்தின் இறுதியில் ஒரு காட்சியில்...
AK64: ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித் நடித்து வெளியான திரைப்படம் குட் பேட் அக்லி. அந்த படத்திற்கு முன் அஜித் நடிப்பில்...