Cinema News
இவங்க எந்த லெவலுக்கும் போவாங்க!.. விடமாட்டேன்!.. டிவிட்டரில் பொங்கிய திரிஷா….
தமிழ் சினிமாவில் 25 வருடங்களுக்கும் மேல் நடித்து வரும் நடிகை திரிஷா. துவக்கத்தில் மாடலிங் துறையில் இருந்து மிஸ் மெட்ராஸ் பட்டமெல்லாம் பெற்று பின் சினிமாவில் நடிக்க துவங்கியவர் இவர். ஒரு கட்டத்தில் முன்னணி நடிகையாக இருந்தார். விஜய், அஜித், சிம்பு, தனுஷ், விக்ரம், சூர்யா, விஷால் என பலருடனும் நடித்தார்.
ஆனால், அவரின் இடத்தை நயன்தாரா பிடித்ததால் திரிஷாவுக்கு வாய்ப்புகள் இல்லாமல் போனது. ஆனாலும், பொன்னியின் செல்வன் ஹிட்டுக்கு பின் திரிஷாவின் மார்க்கெட் மேலே போனது. விஜயுடன் லியோ, அஜித்துடன் விடாமுயற்சி என டேக் ஆப் ஆனார். இப்போது மீண்டும் ஒரு பிஸியான நடிகையாக மாறியிருக்கிறார்.
இதையும் படிங்க: காலையில் ஒரு பெண்… இரவில் ஒரு பெண்… பிரபல இசையமைப்பாளரை கழுவி ஊத்திய பயில்வான் ரங்கநாதன்!…
அதேநேரம் திரிஷாவை வைத்து சர்ச்சையாக சிலர் பேசுவதும் தொடர்கதையாகி விட்டது. சில மாதங்களுக்கு முன்பு மன்சூர் ஆலிகான் இப்படித்தான் சிக்கினார். அவர் சொன்னதுக்கு எதிராக திரிஷா டிவிட்டரில் பதிவிட மன்சூர் அலிகானுக்கு லோகேஷ் கனகராஜ் உட்பட பலரும் கண்டனம் தெரிவித்தனர்.
ஒருகட்டத்தில் தனது பேச்சுக்கு மன்னிப்பு கேட்கும் நிலைக்கு ஆளானார் மன்சூர் அலிகான். இப்போது, சமீபத்தில் அதிமுகவிலிருந்து நீக்கப்பட்ட ஏவி ராஜூ கொடுத்த பேட்டி பரபரப்பை கிளப்பியுள்ளது. கூவத்தூரில் எம்.எல்.ஏக்கள் இருந்த போது அவர்களை குஷிப்படுத்த நடிகைகள் வரவழைக்கப்பட்டனர். திரிஷாவுக்கு 25 லட்சம் கொடுக்கப்பட்டது’ என அவர் சொல்லி இருக்கிறார்.
இது பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. இதைத்தொடர்ந்து இயக்குனர் சேரன் உள்ளிட்ட பல திரையுலக பிரபலங்கள் இதற்கு கடும் கண்டனங்களை தெரிவித்து வருகிறார்கள். இந்நிலையில், இது தொடர்பாக டிவிட்டரில் பதிவிட்டுள்ளர் திரிஷா ‘இது போன்ற மட்டமான மனிதர்களை மீண்டும் மீண்டும் பார்ப்பதற்கு அறுவறுப்பாக இருக்கிறது. இவர்கள் மற்றவர்களின் கவனத்தை பெற எந்த எல்லைக்கும் போவார்கள். அவரின் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க முயற்சி செய்வேன். இது தொடர்பாக சொல்ல வேண்டியது, செய்ய வேண்டியது எல்லாமே இனிமேல் எனது சட்டக்குழு பார்த்துக்கொள்ளும்’ என பதிவிட்டிருக்கிறார்.
இதையும் படிங்க: மன்சூர் அலிகானை பொளந்து கட்டிய த்ரிஷா இதுக்கு என்ன செய்ய போகிறார்? கொழுந்து விட்டு எரியும் கூவத்தூர் சம்பவம்