Vijayakumar: பிரபல நடிகர் விஜயகுமாருக்கு இரண்டு மனைவிகளும், 6 பிள்ளைகள் இருந்தனர். பொதுவாகவே இவர்கள் குடும்பம் ரொம்பவே பிரபலம். அதிலும் இவர் மகள் வனிதா பிரச்னையால் எப்போதும் ட்ரெண்டிங்கில் இருக்கும் இவர்கள் குடும்பம் குறித்து மேலும் சில அதிர்ச்சி தகவல்கள் வெளியாகி இருக்கிறது.
விஜயக்குமாரை விட மஞ்சுளா தான் அதிக படங்களில் நடித்திருந்தார். அவருக்கு தான் சொத்து அதிகம் என்பதால் நடிகை வனிதா அதை தனக்கு பிரித்து கொடுக்கும்படி கேட்டார். ஒரு கட்டத்தில் குடும்பத்தினர் அவரை மொத்தமாக விலகினர். சமீபத்தில் நடந்த அனிதாவின் மகள் தியா திருமணத்தில் கூட வனிதா இல்லை.
இதையும் படிங்க: ஷங்கர் கூட முதல் மருமகனுக்காக ஆதரவாக பேசினாரா? ஆனால் மகள் செய்த துணிச்சலான சம்பவம்!…
ஆனால் மற்ற பிள்ளைகள் அனைவரும் ஒற்றுமையாக தான் இருக்கின்றனர். இருந்தும் மஞ்சுளாவுக்கு விஜயகுமார் துரோகம் செய்துவிட்டதாகவே பயில்வான் ரங்கநாதன் தெரிவித்துள்ளார். அவரின் சமீபத்திய பேட்டியில், முதல் மனைவி முத்துக்கண்ணுக்கு அனிதா, கவிதா, அருண் விஜய் என மூன்று பிள்ளைகள்.
இதில் அனிதாவும், கவிதாவும் எம்.பிபி.எஸ் படித்தவர்கள். இதில் அனிதாவின் மகள் தியாவும் ஒரு டாக்டர் தான். மூத்த மனைவியின் இரண்டு மகள்களையும் டாக்டருக்கு படிக்க வைத்தவர் விஜயகுமார். ஆனால் மஞ்சுளாவின் மகள்களான வனிதா, ப்ரீதா, ஸ்ரீதேவி என்ன படித்தார்கள் என்பது யாருக்குமே தெரியாது? விஜயகுமார் கை கொடுக்கும் கை படத்தினை தயாரிக்க குட் லக் தியேட்டரை விற்று காசு கொடுத்தவர் மஞ்சுளா.
இதையும் படிங்க: அசிங்கமாக திட்டிய திரைப்பிரபலங்கள்!.. கேப்டனின் ரியாக்ஷன் இதுதான்!. நடிகர் சொன்ன தகவல்!..
மாங்குடி மைனர் என்ற படத்தில் எம்.ஜி.ஆர் ரசிகராக நடித்தவர் விஜயகுமார். மேலும் கட்சி கொடியை தன் கையில் பச்சை குத்திக்கொண்டார். ஆனால் அடுத்த நான்கே நாளில் கட்சியில் இருந்து வெளியேற்றப்பட்டார். அந்த நீக்கப்பட்ட அறிக்கையை தயார் செய்தது நான் தான். தமிழ்நாட்டுக்கு வந்த மஞ்சுளா பாதுகாப்பு கருதி விஜயகுமாருக்கு மனைவி ஆனார்.
ஆனால் மஞ்சுளாவின் மகள்களை படிக்கவே வைக்கவில்லை. மூன்று பேரும் நடித்தனர். ஒரு கண்ணில் வெண்ணெய்யை வைத்து இன்னொரு கண்ணில் சுண்ணாம்பை வைத்து விட்டார். வனிதாவுக்கு அழைப்பு விடுக்கப்படாததற்கு அவர் செய்த அசிங்கம் முக்கிய காரணமாக சொல்லப்படுகிறது எனவும் குறிப்பிட்டார்.
இதையும் படிங்க: திடீரென எஸ்கேப் ஆன நடிகை! ரஜினியின் சூப்பர் ஹிட் படத்தில் நடந்த ட்விஸ்ட்.. நல்லவேளை அவங்க நடிக்கல
