தமிழ் ஹீரோக்கள் யாருமே இல்ல!.. வேற வழியில்ல!.. இனிமே அவங்கதான்!.. ஷாக் கொடுத்த தயாரிப்பாளர்..

Published on: February 25, 2024
suresh
---Advertisement---

Suresh Kamatchi: மாநாடு என்ற மிகப்பெரிய வெற்றியை கொடுத்த தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி. இவர்தான் தமிழில் ஹீரோக்கள் என யாருமே இல்லை. ஆனால் தெலுங்கு , மலையாளம், கன்னடம் போன்ற மொழிகளில் ஏராளமானவர்கள் இருப்பதால் அவர்களை தமிழ் சினிமா பயன்படுத்த துவங்கியிருக்கிறது என்றும் கூறியிருக்கிறார்.

அவர் எதற்காக அப்படி சொல்லியிருக்கிறார் என்பதை பார்ப்போம். அதாவது சுரேஷ் காமாட்சி தயாரிப்பில் ‘ஏழு கடல் ஏழு மலை’ என்ற படம் வெளியாகி உலக சினிமாவையே திரும்பி பார்க்க வைத்திருக்கிறது. சர்வதேச பட விழாவில் அந்தப் படத்திற்கு பெரிய அளவில் வரவேற்பும் கிடைத்திருக்கிறது.

இதையும் படிங்க: சிவாஜியின் ஆஸ்தான இயக்குனரை லெஃப்ட் அண்ட் ரைட் வாங்கிய எம்.ஜி.ஆர்!.. காரணம் இதுதான்!…

அந்தப் படத்தை இயக்கியவர் இயக்குனர் ராம். நிவின் பாலிதான் அந்தப் படத்தில் நடித்திருக்கிறாராம். இதை பற்றி தொகுப்பாளர் ‘ஏன் சார் தமிழில் யாரும் ஹீரோ கிடைக்கவில்லையா?’ என சுரேஷ் காமாட்சியிடம் கேட்டார். அதற்கு பதிலளித்த சுரேஷ் காமாட்சி தமிழில் ஹீரோக்கள் என யாரும் இல்லை.

பிசினஸ் அளவில் இருப்பது ஒரு ஐந்து ஆறு ஹீரோக்கள்தான். ஆனால் நல்ல கதை அமைந்து அதற்கேற்ற வகையில் நடிப்பதற்கு என தமிழில் ஹீரோக்கள் யாரும் இல்லை. அதுமட்டுமில்லாமல் நல்ல காதல் கதையுள்ள படத்தை எடுக்கிறோம் என வைத்துக் கொள்வோம். அதில் நடிப்பதற்கு தமிழில் யாராவது இருக்கிறார்களா? இல்லையே.

இதையும் படிங்க: விடாமுயற்சியை தொடர்ந்து ‘வேட்டையன்’ படத்திற்கும் வந்த சிக்கல்! அப்போ பிரச்சினையே இதுதானா!..

லவ் டுடே படத்தில் நடித்ததன் மூலம் பிரதீப் ஒரு ஹீரோவாக மாறியிருக்கிறார். அவரை அடுத்த இடத்திற்கு கொண்டு செல்ல விக்னேஷ் சிவன் முயற்சித்துக் கொண்டிருக்கிறார். ஆனால் கன்னடம் , மலையாளம், தெலுங்கு சினிமாவில் எக்கச்சக்க ஹீரோக்கள் இருக்கிறார்கள். அதையும் மீறி நடிகர்கள் நம்மிடம் இருந்தாலும் அதற்கேற்ற கதைகளும் அமையவில்லை.

மேலும் சமீபகாலமாக பேன் இந்தியா என அனைவரும் அதை நோக்கித்தான் பயணப்பட்டுக் கொண்டிருக்கிறோம். அப்புறம் என்ன தமிழ் ஹீரோனு? அல்லு அர்ஜூனும் வந்து விட்டார். சிவராஜ் குமாரையும் கொண்டாட ஆரம்பிச்சுட்டோம். நாம் எடுக்கிற எல்லா படங்களையும் எல்லா மொழிகளிலும் டப் செய்து ரிலீஸ் செய்கிறார்கள். அப்புறம் எதுக்கு தமிழ் ஹீரோதான் வேண்டும் என ஓடனும் என சுரேஷ் காமாட்சி கூறியிருக்கிறார்.

இதையும் படிங்க: என்னை உருவாக்கியதே அந்த பாடல்தான்!.. பலவருடங்கள் கழித்து இசைஞானி இளையராஜா சொன்ன மேட்டர்!..

Rohini

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.