Connect with us

Cinema News

அந்த வேலை கிடைக்காததால் நடிகரான ஏ.வி.எம் ராஜன்… கடைசியில் என்ன ஆனார் தெரியுமா?

பழங்கால நடிகர்களில் ஏவிஎம்.ராஜன் மறக்க முடியாத நபர். இவரது இயற்பெயர் சண்முகசுந்தரம். 26.7.1935ல் புதுக்கோட்டையில் பிறந்தார். 60, 70 களில் இவர் தமிழ்த்திரை உலகில் சக்கை போடு போட்டார். மெட்ராஸ் யுனிவர்சிட்டியில் கணிதப் பாடத்தில் பட்டம் பெற்றார்.

சினிமா மோகத்தால் நடிகரானார். இவரது பெற்றோர் இவரைக் காவல்துறை அதிகாரியாகப் பார்க்க ஆசைப்பட்டார்களாம். ஆனால் அதற்கு தேர்வெழுத சென்னை வந்தபோது அவர் அதில் தகுதிபெறவில்லையாம்.

அதனால், சென்னை கிண்டி ராஜ்பவனில் பணியாற்றினாராம். நல்ல வருமானத்திற்காக சினிமா வாய்ப்பு தேடி அலைந்தாராம். கடைசியில் அவருக்கு ஆயிரங்காலத்துப் பயிர் என்ற படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. தொடர்ந்து நானும் ஒரு பெண் படத்தில் நடித்தார். ஏவிஎம் தயாரித்த அந்தப் படம் ரசிகர்கள் மத்தியில் பலத்த வரவேற்பைப் பெற்றது.

Naanum Oru Penn

Naanum Oru Penn

1967ல் கற்பூரம் என்ற படத்தில் நடித்தார். சிறந்த நடிகருக்கான மாநில விருது கிடைத்தது. இவருக்கு 2 மகள்கள். மூத்த மகள் பெயர் மகாலெட்சுமி. இவர் 80, 90களில் நடிகையாக சில படங்களில் நடித்தார். 19.1.1984ல் ஏவிஎம்.ராஜன் மதம் மாறி முழுநேர கிறிஸ்தவ போதகரானார். இவரது மனைவி புஷ்பலதா கத்தோலிக்க கிறித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

இவர் நடித்த நானும் ஒரு பெண் படம் ஏவிஎம். நிறுவனத்தின் தயாரிப்பு. படமும் செம மாஸாக இருந்தது. இதனால் தனது பெயருக்கு முன்னால் திரைப்பட நிறுவனத்தின் பெயரையே அடைமொழியாக சேர்த்துக் கொண்டாராம்.

ஏவிஎம்.ராஜன், கே.சங்கர் இயக்கத்தில் 1959ல் முதன் முதலில் சிவகங்கை சீமை படத்தில் நடித்தார். ஆனால் அவர் நடித்தக் காட்சிகளைக் கட் செய்து விட்டார்கள். அதன்பின் அவர் ஏ.சி.திருலோகசந்தர் இயக்கத்தில் நடித்த நானும் ஒரு பெண் படம் தான் செம மாஸானது. ஆயிரம் காலத்து பயிர், பார்மகளே பார், துளசி மாடம், சித்ராங்கி, பச்சை விளக்கு, தெய்வம், ஆண்டவன் கட்டளை, நம்ம வீட்டு லட்சுமி, வீர அபிமன்யு, மேஜர் சந்திரகாந்த், கொடிமலர் போன்ற படங்களில் இவரது சிறப்பான நடிப்பைப் பார்த்து ரசிக்கலாம்.

author avatar
sankaran v
பி.ஏ பட்டதாரியான இவர் ஊடகத் துறையில் 13 ஆண்டுகளாக பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, ஆன்மிகம்,லைப் ஸ்டைல் கட்டுரைகளை வழங்கி வந்தார். கடந்த 4 ஆண்டுகளாக சினி ரிப்போர்டஸ் தளத்தில் உதவி ஆசிரியராக பணியாற்றி வருகிறார்.
Continue Reading

More in Cinema News

To Top