Cinema History
அவர் இல்லனா நான் இல்ல!.. வாலிக்கு தக்க சமயத்தில் உதவிய பாடகர் பற்றி தெரியுமா?…
1960களில் பல திரைப்படங்களில் பாடல்களை எழுதி பிரபலமானவர் கவிஞர் வாலி. சினிமாவில் பாடலாசிரியராக வேண்டும் என முடிவு செய்து சென்னை வந்து ஒரு இடத்தில் தங்கி வாய்ப்பு தேடினார் வாலி. இவருடன் தங்கி வாய்ப்பு தேடியவர்களில் நாகேஷ் மற்றும் நடிகர் ஸ்ரீகாந்தும் அடக்கம்.
சினிமாவில் அவ்வளவு சுலபமாக வாய்ப்பு கிடைக்கவில்லை. ஏனெனில், அப்போது கவிஞர் கண்ணதாசன் பல படங்களுக்கும் பாடல்களை எழுதிக்கொண்டிருந்தார். 4 வருடங்களில் 2 பாடல்களை மட்டுமே வாலி எழுதியிருந்தார். ஒரு கட்டத்தில் நண்பனின் அறிவுரையால் சினிமாவில் முயற்சி செய்வதை விட்டுவிட்டு திருச்சியில் ஒரு வேலையில் சேர்ந்துவிடுவது எனவும் முடிவெடுத்தார் வாலி.
இதையும் படிங்க: நீங்கள் சொல்வது அநியாயம்!.. எம்.ஜி.ஆரிடம் எகிறிய வாலி!.. பாலச்சந்தரை பற்றி இப்படி சொல்லிட்டாரே!..
புறப்படுவதற்கு முதல்நாள் இரவு கண்ணதாசன் எழுதிய ‘மயக்கமா கலக்கமா.. மனதிலே குழப்பமா. வாழ்க்கையில் நடுக்கமா’ பாடலை கேட்டார். அந்த பாடல் வரிகள் அவருக்கு மிகப்பெரிய ஆறுதலாகவும், நம்பிக்கையும் கொடுத்தது. எனவே, அந்த வேலைக்கு செல்லாமல் மீண்டும் தீவிரமாக வாய்ப்பு தேடினார்.
அதன் பின்னரே அவருக்கு வாய்ப்புகள் கிடைத்து பிரபலமாக துவங்கினார். ஒருகட்டத்தில் எம்.ஜி.ஆரின் ஆஸ்தான பாடலாசிரியராக மாறி அவருக்கு பல படங்களிலும் பாடல்களை எழுதினார். வாலி கஷ்டப்படும்போது அவருக்கு பலரும் பல வகைகளிலும் உதவி இருக்கிறார்கள்.
இதையும் படிங்க: எம்.ஜி.ஆர் படத்துக்காக சென்சாரையே ஏமாற்றி பாடல் எழுதிய வாலி!.. கவிஞர் செம கில்லாடிதான்!..
அதில் பின்னணி பாடகர் பி.பி.ஸ்ரீனிவாஸ் முக்கியமானவர். ஒவ்வொரு முறையும் அம்மாவுக்கு திதி கொடுக்கும் நாள் வரும்போது அவரிடம் போய் நிற்பாராம் வாலி. பாக்கெட்டில் இருந்து 10 ரூபாயை எடுத்து கொடுப்பாராம் ஸ்ரீனிவாஸ். அதேபோல், மற்ற மொழி படங்கள் தமிழில் உருவாகும்போது அதற்கு எப்படி பாடல்களை எழுத வேண்டும் என வாலிக்கு சொல்லி கொடுத்ததும் ஸ்ரீனிவாஸ்தான்.
இதுபற்றி பேட்டி ஒன்றில் சொன்ன வாலி ‘பிபி ஸ்ரீனிவாஸ் எனக்கு பல வகைகளிலும் உதவியிருக்கிறார். அவர் இல்லையென்றால் 300 டப்பிங் படங்களுக்கு பாடல்களை என்னால் எழுதி இருக்க முடியாது’ என கூறினார்.