நீங்கள் சொல்வது அநியாயம்!.. எம்.ஜி.ஆரிடம் எகிறிய வாலி!.. பாலச்சந்தரை பற்றி இப்படி சொல்லிட்டாரே!..

Balachandar: தமிழ் திரையுலகில் பல இயக்குனர்கள் வருவார்கள்.. போவார்கள்.. ஆனால், சில இயக்குனர்கள் மட்டுமே தனித்துவமாக இருப்பார்கள். அதில் முக்கியமானவர் பாலச்சந்தர். யாரும் தொட முடியாத, யோசிக்கவே முடியாத கதைகளை திரைப்படங்களாக எடுத்தவர். வெற்றிக்கு இதுதான் பார்முலா. இதை தாண்டி யோசித்தாலோ, புதிதாக எதாவது செய்ய முயற்சி செய்தாலோ, பரிசோதனை முயற்சியில் ஈடுபட்டாலோ தோல்விதான் என இயக்குனர்கள் பயந்தபோது அதை துணிந்து செய்தவர் பாலச்சந்தர்.

அதாவது வெற்றி பெறுவதற்கு தேவையான வசதியான கதைகளை தேர்ந்தெடுத்து அதில் எல்லா இயக்குனர்களும் பயணித்தபோது ‘ நான் வேற மாறி’ என அப்போதே யோசித்தவர் இவர். வித்தியாசமான கதைகளை கொண்ட படங்களை இயக்கினார். குறிப்பாக முக்கோண காதல் கதையை தனது பல படங்களிலும் பயன்படுத்தி இருக்கிறார்.

இதையும் படிங்க: நான் மட்டும் என்ன தக்காளி தொக்கா?!.. கோபப்பட்ட வாலிக்காக விழாவை கேன்சல் பண்ண சொன்ன எம்.ஜி.ஆர்!..

ரஜினி, சரத்பாபு உள்ளிட்ட பல நடிகர்களை திரையுலகுக்கு அறிமுகம் செய்து வைத்தவர் இவர். அபூர்வ ராகங்கள் படத்தின் மூலம் ரஜினியை அறிமுகம் செய்து அதன்பின் தொடர்ந்து அவருக்கு வாய்ப்பு கொடுத்து அவரை ரசிகர்களிடம் நெருக்கமாக்கியவர் இவர்தான். அதேபோல், கமல்ஹாசன் என்பவர் எப்படிப்பட்ட நடிகர் என்பதை திரையுலகுக்கும், ரசிகர்களுக்கும் காட்டியவர் இவர்.

சினிமாவுக்கு வருவதற்கு முன் பல நாடகங்களை இயக்கிவந்தார். அதன்பின் சினிமாவில் பல படங்களுக்கு வசனங்களை எழுதி இருக்கிறார். பாலச்சந்தரின் பல நாடகங்கள் சினிமாவாக மாறியிருக்கிறது. பெண் கதாபாத்திரங்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து பல திரைப்படங்களை இயக்கிய ஒரே இயக்குனர் இவர்தான்.

பாலச்சந்தர் கவிஞர் வாலிக்கு நெருக்கமானவர். பொய்க்கால் குதிரை எனும் படத்தில் முக்கிய வேடத்தில் வாலியை நடிக்க வைத்தவர். பாலச்சந்தரின் வசனத்தில் எம்.ஜி.ஆர், சரோஜாதேவி நடிக்கவிருந்த உடன்பிறப்பு என்கிற திரைப்படம் நின்று போனது. இதுபற்றிவாலியிடம் பேசிகொண்டிருந்த எம்.ஜி.ஆர் ‘நான் வாலியை பற்றி கேள்விப்பட்டேன். அவருக்கு வசனங்களை எல்லாம் எழுதி தருவது நாகேஷ்தான் என சொல்கிறார்கள். அது உண்மையா?’ என கேட்டிருக்கிறார்.

இதையும் படிங்க: வாலிக்காக வரிகளை மாற்ற சொன்ன எம்.ஜி.ஆர்!.. கடுப்பாகி கத்திய கண்ணதாசன்!.. நடந்தது இதுதான்!..

அதற்கு பதில் சொன்ன வாலி ‘பாலச்சந்தர் பற்றி நீங்கள் கேட்டது அநியாயம். அவர் ஒரு சுயம்பு. நாடகம் முதல் சினிமா வரை எல்லாமே ஒன் மேன் ஷோ. அவரின் படங்களில் வசனங்களை அவர் மட்டுமே எழுதுவார். நாகேஷ் நடித்தால் கூட ஒரு வசனம் கூட அவரை சேர்த்து பேச விடமாட்டார். அவரைப்பற்றி உங்களிடம் யாரோ தவறாக சொல்லி இருக்கிறார்கள்’ என வாலி சொன்னார்.

வாலி அப்படி சொன்னதும் அவரிடம் அப்படி கேட்டதற்காக வருத்தப்பட்ட எம்.ஜி.ஆர் ‘வாலி இப்போது நான் தெளிவாகி விட்டேன். பாலச்சந்தர் என் மனதில் இன்னும் உயர்ந்துவிட்டார்’ என சொல்லி எம்.ஜி.ஆரிடம் யார் அப்படி சொன்னார் என்பதையும் வாலியும் அவர் சொல்லி இருக்கிறார்.

இதையும் படிங்க: அவர் மேல எந்த தப்பும் இல்ல!.. நான்தான் காரணம்!.. வாலிக்காக பழியை ஏற்றுகொண்ட எம்.எஸ்.வி..

Related Articles
Next Story

COPYRIGHT 2024

Powered By Blinkcms
Share it