நான் மட்டும் என்ன தக்காளி தொக்கா?!.. கோபப்பட்ட வாலிக்காக விழாவை கேன்சல் பண்ண சொன்ன எம்.ஜி.ஆர்!..

எம்.ஜி.ஆர் சினிமாவில் வளர்ந்த நேரத்தில் அவருக்கு கதை, வசனம் மற்றும் பாடல்களை எழுதியவர் கவிஞர் கண்ணதாசனாக இருந்தாலும் ஒரு கட்டத்தில் எம்.ஜி.ஆருக்கு ஆஸ்தான பாடலாசிரியராக மாறியவர் கவிஞர் வாலி. அதற்கு காரணம் எம்.ஜி.ஆருக்கும், கண்ணதாசனுக்கும் அரசியல் ரீதியாக ஏற்பட்ட மோதல்தான்.

எம்.ஜி.ஆரின் நம்நாடு, படகோட்டி, எங்க வீட்டு பிள்ளை, ஆயிரத்தில் ஒருவன், உலகம் சுற்றும் வாலிபன் என பல முக்கிய படங்களுக்கு பாடல்களை எழுதியவர் வாலிதான். இன்னும் சொல்லப்போனால் எம்.ஜி.ஆருக்கு வாலி எழுதிய தத்துவ பாடல்களை பலரும் கண்ணாசன் எழுதியதாகவே நினைத்தார்கள்.

இதையும் படிங்க: எம்.ஜி.ஆர் படத்துக்காக சென்சாரையே ஏமாற்றி பாடல் எழுதிய வாலி!.. கவிஞர் செம கில்லாடிதான்!..

வாலியை எம்.ஜி.ஆர் எப்போதும் ‘ஆண்டவரே’ என்றுதான் அழைப்பார். வாலியோ ‘அண்ணே’ என பாசமாக அழைப்பார். எம்.ஜி.ஆரை சந்திக்க வாலி எப்போது அவரின் வீட்டுக்கு போனாலும் அவரை சாப்பிட வைத்துதான் அனுப்புவார் எம்.ஜி.ஆர். அவர் மீது அவருக்கு அவ்வளவு அன்பும், மரியாதையும் இருந்தது.

வாலியிடம் உங்கள் திருமணத்தை நான்தான் நடத்தி வைப்பேன் என சொல்லி இருந்தார் எம்.ஜி.ஆர். ஆனால், சூழ்நிலை காரணமாக திடீரென திருமணம் செய்து கொண்டார் வாலி. இது எம்.ஜி.ஆரை கோபப்படுத்த ‘இனிமேல் என் படத்துக்கு வாலி பாடல்கள் எழுதக்கூடாது’ என்றும் சொன்னார் எம்.ஜி.ஆர். அதன்பின் கோபம் மறந்து வாலியை அழைத்து பாடல்களை எழுத சொன்னார்.

நம்நாடு படத்தின் 100வது நாள் விழா மதுரை மீனாட்சி தியேட்டரில் நடப்பதாக இருந்தது. இதற்காக எம்.ஜி.ஆர், ஜெயலலிதா, எம்.எஸ்.விஸ்வநாதன் ஆகியோருக்கு விமானத்தில் டிக்கெட் போடப்பட்டது. அப்படத்தில் பாடல் எழுதிய வாலி மற்றும் ரங்காராவ், அசோகன் போன்றவர்களுக்கு ரயில் முதல் வகுப்பில் டிக்கெட் போடப்பட்டது.

இதையும் படிங்க: ஏ.ஆர். ரஹ்மான் – வைரமுத்து சண்டைக்கு இதுதான் காரணமா?.. வாலி போல இவர் வரவே மாட்டாரா?.

இதில் கோபமடைந்த வாலி நீரும் நெருப்பும் படப்பிடிப்பில் இருந்த எம்.ஜி.ஆரை சந்தித்து ‘நான் விழாவுக்கு வரவில்லை’ என சொல்ல, என்ன காரணம் என எம்.ஜி.ஆர் கேட்க ‘எம்.எஸ்விக்கு விமானத்தில் டிக்கெட் போடும்போது பாடலை எழுதிய எனக்கு மட்டும் ரயிலில் டிக்கெட் போட்டிருக்கிறார்கள்’ என சொல்ல, அதில் கோபமடைந்த எம்.ஜி.ஆர் உடனே நம்நாடு பட இயக்குனர் ஜம்புவுக்கு போன் செய்து ‘விழாவை கேன்சல் செய்யுங்கள்’ என சொல்லிவிட்டு போனை வைத்துவிட்டார்.

ஒன்றும் புரியாமல் பதறிய ஜம்பு எம்.ஜி.ஆரை பார்க்க படப்பிடிப்பு தளத்திற்கு வந்தார். விஷயம் கேள்விப்பட்டு தயாரிப்பு தரப்பிற்கு சொல்லி வாலிக்கும் விமானத்தில் டிக்கெட் போட சொல்லிவிட்டு, எம்.ஜி.ஆரை சமாதானம் செய்து அந்த விழாவுக்கு வர வைத்தார். வாலி மீது எம்.ஜி.ஆர் எவ்வளவு மரியாதை வைத்திருந்தார் என்பதற்கு உதாரணமாக இந்த சம்பவத்தை சொல்லலாம்.

இதையும் படிங்க: வாலிக்காக வரிகளை மாற்ற சொன்ன எம்.ஜி.ஆர்!.. கடுப்பாகி கத்திய கண்ணதாசன்!.. நடந்தது இதுதான்!..

 

Related Articles

Next Story