எல்லா அசிங்கமும் அஜித்துக்குத்தான்! திட்டுறதுக்கு எனக்கு உரிமை இருக்கு.. பிரபலம் கொடுத்த ஷாக்

Published on: February 26, 2024
ajith
---Advertisement---

Actor Ajith: அஜித்துக்கு நேரம் சரியில்லை என்றுதான் சொல்ல வேண்டும். திரும்பிய பக்கம் எல்லாம் கோல் அடித்துக் கொண்டேதான் இருக்கிறார்கள். கடந்த இரண்டு மாதங்களாக தொடர்ந்து அஜித்தை பற்றி பல விமர்சனங்கள் வந்து கொண்டேதான் இருக்கின்றன.

அஜித் படமே வரவே இல்லை என்ற பிரச்சினையை இந்த விமர்சனங்கள் தீர்த்து வைத்திருக்கின்றன. அந்தளவுக்கு அஜித்தை வசைபாடிக் கொண்டே ஒரு கூட்டம் சுற்றி வருகிறது. இந்த நிலையில் வலைப்பேச்சு அந்தனன் ‘அஜித்தை புறக்கணிப்போம்’ என்ற டைட்டில் ஒரு வீடியோவை வெளியிட்டார்.

இதையும் படிங்க: 24 மணி நேரமும் நான்வெஜ்… ஷூட்டிங்கில் அணையவே கூடாத அடுப்பு… பிரபல இயக்குனர் சொல்லிய கண்டிஷன்…!

அஜித்திற்கு இருக்கும் ரசிகர்களை பற்றி தெரிந்திருந்தும் துணிந்து இந்த வீடியோவை வெளியிட்டார் அந்தனன். அவ்வளவுதான். அடுத்த நாளில் இருந்து அஜித் ரசிகர்கள் அந்தனனுக்கு கண்ணீர் அஞ்சலி போஸ்டரை ஒட்ட ஆரம்பித்துவிட்டனர்.

அதுமட்டுமில்லாமல் கண்டபடி அந்தனை திட்டியும் வருகிறார்கள். இந்த வீடியோவை போடுவதற்கு முன்னரே அந்தனன் ‘அஜித் ரசிகர்கள் கண்டிப்பாக என்னை திட்டுவார்கள். இருந்தாலும் நான் சொல்ல வந்ததை சொல்லி விடுகிறேன்’ என்று சொல்லித்தான் அஜித்துக்கு எதிரான கருத்துக்களை கூறினார்.

இதையும் படிங்க: இனிமேல் அவன் கூட படம் பண்ணக் கூடாது! கைதி 2 பற்றி ஷாக் கொடுத்த அர்ஜூன் தாஸ்

இந்த நிலையில் மீண்டும் ஒரு வீடியோவில் அந்தனன் பேசிய சில விஷயங்கள் வைரலாகி வருகின்றது. அதாவது இதற்கு முன் அஜித்தை புகழ்ந்து எவ்வளவோ பேசியிருக்கிறேன். அவர் செய்த நல்ல விஷயங்களை இந்த உலகத்திற்கு சொல்லியிருக்கிறேன். அவரை பாராட்ட எனக்கு உரிமை இருக்கிறது மாதிரி அஜித்தை கண்டிக்கவும் எனக்கு உரிமை இருக்கு என அந்தனன் கூறினார்.

மேலும் எனக்கு கண்ணீர் அஞ்சலி போஸ்டர் எல்லாம் ஒட்டினார்கள். அது யாருக்கு அசிங்கம்? அஜித்துக்குத்தான். அஜித் ரசிகர்கள்தான் இதை செய்தார்கள் என்றால் அஜித்துக்குத்தான் கேவலம். அதனால் அஜித் ரசிகர்கள் இப்படித்தான் இருப்பார்கள். அதற்காக நம்முடைய கருத்தை சொல்லாமல் இருக்க முடியாது. அதுமட்டுமில்லாமல் அஜித்தை வற்புறுத்தவே இல்லை.

இதையும் படிங்க: தாதா சாகேப் பால்கே விருதுக்கு சோக்கா போஸ் தந்த நயன்தாரா… முழுசா சொல்லாமல் ஊழலா செய்றீங்க?

இப்படி செய்தால் நன்றாக இருக்கும். இங்கு வந்தால் நன்றாக இருக்கும் என்ற ஒரு ஆலோசனையைத்தானே கூறினேன் என அந்தனன் கூறினார்.

Rohini

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.