Cinema History
வெற்றியை விட கொள்கைதான் முக்கியம்.. சிவாஜிக்கு கிடைச்சது கூட எம்ஜிஆருக்கு கிடக்கலயே!..
MGR Sivaji: தமிழ் சினிமாவில் மாபெரும் சக்திகளாக இருந்தவர்கள் நடிகர் எம்ஜிஆரும் சிவாஜியும். இருவருமே சினிமாவில் ஒரு பெரிய இடத்தில் இருந்தாலும் அவர்களுக்குள் எந்தவொரு ஈகோவும் இல்லாமல் நட்பாக பழகிவந்தார்கள். தொழில்முனையில் போட்டி இருந்தாலும் அதை நிஜத்தில் அவர்கள் காட்டிக் கொள்வதில்லை.
ஒரே தொழிலில் இருக்கும் இருபெரும் நட்சத்திரங்கள் எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு ஒரு உதாரணமாக அவர்கள் வாழ்ந்து வந்தார்கள். இந்த நிலையில் சிவாஜியின் படங்களான எங்கு இருந்தோ வந்தாள் மற்றும் சொர்க்கம் போன்ற படங்கள் ஒரே நேரத்தில் ரிலீஸ் ஆகி மாபெரும் வெற்றிப் பெற்ற படங்களாக அமைந்தன.
இதையும் படிங்க: விஜய் அரசியலுக்கு வந்தால் என்ன நடக்கும் தெரியுமா? பதிலடி கொடுத்த சின்னத்திரை நடிகர் சஞ்சீவ்…
அதே போல் எம்ஜிஆருக்கும் அமைந்திருக்கிறதா என ரசிகர் ஒருவர் சித்ரா லட்சுமணனிடம் கேட்டார். சிவாஜிக்கு அப்படிப்பட்ட வெற்றியை போல் எம்ஜிஆருக்கு அமையவில்லை என கூறி அதற்கான காரணத்தையும் கூறினார். அதாவது சிவாஜியை பொறுத்தவரைக்கும் நடிப்பை தவிற வேறெந்த விஷயத்திலும் தலையிட மாட்டாராம்.
நடித்து விட்டோமா? அவ்வளவுதான் என இருந்து விடுவாராம். ஆனால் எம்ஜிஆர் அப்படி இல்லையாம். நடிப்பையும் தாண்டி சினிமாவில் இருக்கும் மற்ற விஷயங்களிலும் கவனம் செலுத்துவாராம். படத்திற்கு இசை சேர்க்கும் பணிகளில் தலையிடுவதில் இருந்து அந்தப் படம் ரிலீஸ் ஆகும் வரை அனைத்திலும் தலையிடுவாராம்.
இதையும் படிங்க: 60களில் பட்டிதொட்டி எங்கும் பட்டையை கிளப்பிய காமெடி படம்… உருவானதுக்குக் காரணமே அந்த நடிகைதான்!..
அந்தப் படம் எப்பொழுது ரிலீஸ் ஆகவேண்டும்? எப்படி ரிலீஸ் ஆக வேண்டும் என்பதையே எம்ஜிஆர்தான் முடிவு செய்வாராம். அதன் காரணமாகவே எம்ஜிஆரின் இரு படங்கள் ஒரே நேரத்தில் ரிலீஸ் ஆக கூடாது என்று கூட எம்ஜிஆர் முடிவு எடுத்திருக்கலாம் என சித்ரா லட்சுமணன் கூறினார்.