வேட்டையன் வரார் வழிவிடுங்கோ!.. அந்த கெட்டப்பில் வெளியான ரஜினிகாந்த் வீடியோ.. செம வைரல்!..

Published on: February 28, 2024
---Advertisement---

சூர்யா, மணிகண்டன், பிரகாஷ் ராஜ், லிஜோமோல் ஜோஸ் உள்ளிட்ட பலர் நடிப்பில் அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் நேரடியாக வெளியான ஜெய்பீம் திரைப்படம் ரசிகர்கள் மத்தியிலும் விமர்சகர்கள் மத்தியிலும் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது.

அந்த படத்தை இயக்கிய இயக்குநர் ஞானவேல் அடுத்து ரஜினிகாந்தை வைத்து வேட்டையன் படத்தை இயக்கி வருகிறார். ஜெயிலர் படத்தின் வெற்றிக்கு பிறகு மீண்டும் மல்டி ஸ்டார் கூட்டணியுடன் பிரம்மாண்டமாக உருவாகி வரும் இந்த படத்தை லைக்கா நிறுவனம் தயாரித்து வருகிறது.

இதையும் படிங்க: வெற்றியை விட கொள்கைதான் முக்கியம்.. சிவாஜிக்கு கிடைச்சது கூட எம்ஜிஆருக்கு கிடக்கலயே!..

போலீஸ் அதிகாரியாக வேட்டையன் படத்தில் ரஜினிகாந்த் நடித்து வரும் நிலையில், அந்த கெட்டப்புடன் தலைவர் இருந்து இறங்கி ஷூட்டிங் ஸ்பாட்டுக்கு செல்லும் வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

ஹைதராபாத்தில் தற்போது வேட்டையன் படத்தின் படப்பிடிப்புகள் தகவல்கள் வெளியாகியுள்ளன. ஜெயிலர் படத்தில் பிளாஷ்பேக் காட்சியில் பார்த்த ரஜினியை விட மிகவும் இளமையாக இந்த கெட்டப்பில் ரஜினிகாந்த் இருப்பதாக ரசிகர்கள் பதிவிட்டு வருகின்றனர். மேலும், சிலர் அதற்குள் ஜெயிலர் 2 ஆரம்பித்து விட்டதாகவும் உருட்டத் தொடங்கி உள்ளனர்.

இதையும் படிங்க: ப்ளூ சட்டை மாறனுக்கு விடிவு காலம் பொறந்துடுச்சு!.. ஒருவழியா ஓடிடியில் ரிலீஸான ஆன்டி இண்டியன்!

வேட்டையன் படத்தை முடித்துவிட்டு தலைவர் 171 மற்றும் நெல்சன் இயக்கத்தில் ஜெயிலர் 2 படங்கள் கைவசம் உள்ள நிலையில் அடுத்ததாக தயாரிப்பாளர் சஜித் நடியாத்வாலா தயாரிப்பில் ஒரு படத்தில் ரஜினிகாந்த் நடிக்கப் போவதாகவும் அறிவிப்பு வெளியாகி இருக்கிறது.

72 வயதிலும் கைவசம் அடுத்தடுத்து 4 படங்கள் லைன் அப்பில் வைத்துக் கொண்டிருக்கிறார் சூப்பர் ஸ்டார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், அனைத்து நிகழ்ச்சிகளிலும் சூட்டிங்கை நடத்திக் கொண்டே அவர் சென்னைக்கும் ஹைதராபாத்துக்கும் பறந்து பறந்து சென்று நடித்து வருவது குறிப்பிடத்தக்கது.

Saranya M

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.