டைட்டிலில் இப்படி ஒரு சிக்கலா? அலட்சியப்படுத்திய பாலா.. இனிமே ‘வணங்கான்’ இல்லயாம்

Published on: February 28, 2024
bala
---Advertisement---

Vanangan Movie: பாலாவின் இயக்கத்தில் அருண்விஜய் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் வணங்கான். இந்தப் படத்தின் டீஸர் வெளியாகி பெரும் எதிர்பார்ப்பை கிளப்பியிருக்கிறது. முதலில் ஒரே ஒரு போஸ்டரால் அனைவரின் கவனத்தை தன் பக்கம் திருப்பினார் பாலா. ஒரு கையில் பிள்ளையார் சிலை இன்னொரு கையில் பெரியார் சிலை என அருண்விஜய் வைத்திருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு யோசிச்சே சாவுங்கடா என்ற பாணியில் அந்த போஸ்டரை வெளியிட்டார் பாலா.

அவர் நினைத்ததை போலவே அந்த போஸ்டர் வெளியாகி பெரும் விவாதத்திற்கும் உள்ளானது. பாலா என்னதான் சொல்லப் போகிறார் இந்தப் படத்தில் என செய்திகளில் பல பிரபலங்கள் , பத்திரிக்கையாளர் என மாறி மாறி பேட்டி கொடுத்து வந்தனர். இந்த நிலையில் சில தினங்களுக்கு முன்புதான் வணங்கான் திரைப்படத்தின் டீஸரும் வெளியானது.

இதையும் படிங்க: என்னை கைகாட்டி சிவாஜி பேசியதும் அப்படியே ஷாக் ஆயிட்டேன்… ரமேஷ் கண்ணா கொடுத்த ஆச்சரிய தகவல்

அந்த டீஸரில் அருண்விஜயை வச்சி செய்திருக்கிறார் பாலா என்று தெள்ளத்தெளிவாக தெரிகிறது. வெறும் அழுக்கு சட்டை லுங்கியிலேயே அருண்விஜய் நடித்திருப்பதாக தெரிகிறது. ஆனால் அருண்விஜய்க்கு வணங்கான் திரைப்படம் ஒரு பெரிய திருப்புமுனை படமாக அமையும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.

அதுமட்டுமில்லாமல் பிதாமகன் விக்ரம் போலவே அருண்விஜய் இந்தப் படத்தில் நடித்திருப்பதாக சில பேர் கூறிவந்தார்கள். இந்த நிலையில் வணங்கான் படத்தின் டைட்டிலுக்கு திடீரென ஒரு சிக்கல் எழுந்துள்ளது. அதாவது ஒளிப்பதிவாளர் சரவணன் ஏற்கனவே வணங்கான் என்ற பெயரில் ஒரு படத்தை சென்சாரில் பதிவு செய்து வைத்திருக்கிறாராம். அதுவும் டீஸர் வரை தயார் செய்து பதிவு செய்து வைத்துவிட்டாராம்.

இதையும் படிங்க: மேலிடத்தில் இருந்து வந்த ஒரே ஒரு மெயில்! ஆடிப்போன ‘அமரன்’ படக்குழு.. இப்போ என்ன பண்ணுவாங்க?

இப்போது பாலா இயக்கும் வணங்கான் திரைப்படமும் சென்சாருக்கு போக இதே பெயரில் ஒரு படத்தின் டீஸர் வந்திருக்கிறது என அவர்கள் சொல்ல வணங்கான் படம் ‘பாலாவின் வணங்கான்’ என்று மாறுவதாக சொல்லப்படுகிறது. இந்த பிரச்சினை சூர்யா வணங்கான் திரைப்படத்திற்குள் வரும் போதே இருந்ததாம். பாலாவுக்கும் ஏற்கனவே வணங்கான் பெயரில் ஒரு படம் இருக்கிறது என்று தெரியுமாம். இருந்தாலும் அதை அலட்சியமாக விட்டிருக்கிறார் என்று கோடம்பாக்கத்தில் கூறுகிறார்கள்.

Rohini

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.