Connect with us
Sivaji, Ramesh Kanna

Cinema History

என்னை கைகாட்டி சிவாஜி பேசியதும் அப்படியே ஷாக் ஆயிட்டேன்… ரமேஷ் கண்ணா கொடுத்த ஆச்சரிய தகவல்

ரமேஷ் கண்ணா.  மற்ற நடிகர்களில் இருந்து இவரது காமெடியில் ஒரு தனித்துவம் இருக்கும். பார்ப்பதற்கு ரசிக்கும்படியாகவும் இருக்கும்.  நடிகரும், இயக்குனருமான ரமேஷ் கண்ணா நடிகர் திலகம் சிவாஜி கணேசனுடன் நடித்த அனுபவம் குறித்து இவ்வாறு தெரிவித்துள்ளார்.

1998ல் படையப்பா சூட்டிங். கர்நாடகாவில் மாண்டியா தாண்டி மேல் கோட்டை கோவில்ல படப்பிடிப்பு. சிவாஜி, ரஜினி எல்லாரும் ஓட்டல்ல தங்கிருக்காங்க. நாங்க வேறு இடத்துல தங்கிருக்கோம். நாங்க தான் சினிமாவுக்கு நடிகர்களை அழைச்சிட்டுப் போகணும். முதல் நாள் காலையில் 6 மணிக்கு சூட்டிங். அங்கேப் போகணும்னா காலை 5 மணிக்கே கிளம்பணும். சிவாஜி சார் எங்கே 5 மணிக்கு எழும்புவாருன்னு நினைச்சோம். அதனால நானும் தேனப்பனும் அவர் தங்கியிருந்த ஓட்டலுக்கு 5.45க்குப் போனோம்.

Padayappa

Padayappa

அங்கே போனா ஓட்டல் வாசல்ல மேக்கப் எல்லாம் போட்டு சிவாஜி ரெடியா நிக்கிறாரு. நான் வண்டியை நிறுத்தாத. முன்னாடி தள்ளிப்போன்னு டிரைவர்கிட்ட சொல்லிட்டு தேனப்பனை விட்டு சிவாஜி சாரைக் கூட்டிட்டு வரச் சொன்னேன். தேனப்பன் போனதும் ஏன் லேட்டுன்னு கேட்குறாரு. அது லேட்டுன்னு சொல்ல முடியாது. கரெக்டான நேரம் தான். இருந்தாலும் அவரோட சின்சியாரிட்டி ரொம்ப ஆச்சரியப்பட வைத்தது.

திறமை எப்படி இருந்தாலும் அர்ப்பணிப்பும் சேர்ந்து தான் நம்மோட உயரத்தைத் தீர்மானிக்குது. செட்டுக்குப் போனதும் ரவிக்குமார்கிட்ட என்னைக் காட்டிக் கேட்டாரு. இந்தப் பையன் யாருன்னு? என்னோட அசிஸ்டண்ட் டைரக்டர். என்ன ஆச்சின்னு கேட்டாரு. இவன் தானே முத்துராமன் பையனோட படத்துல நடிச்சவன்னு கேட்டார். ரொம்ப சூப்பரா காமெடி பண்ணிருக்கான்னு அவர் சொன்னதும் எனக்கு சந்தோஷம் தாங்க முடியல. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

ரமேஷ் கண்ணா கார்த்திக் நடித்த உன்னிடத்தில் என்னைக் கொடுத்தேன் படத்தில் நடித்திருந்தார். மேலும், உன்னை நினைத்து, பிரண்ட்ஸ், படையப்பா, வில்லன் உள்பட பல படங்களில் காமெடி வேடத்தில் நடித்து அசத்தியுள்ளார். அஜீத்குமார் நடித்த தொடரும் படத்தை இயக்கியவர் இவர் தான்.

google news
Continue Reading

More in Cinema History

To Top