நான் யாருன்னு காட்டுறேன்!. லால்சலாம் ஃபிளாப்புக்கு பின் அந்த நடிகருக்கு வலைவிரிக்கும் ஐஸ்வர்யா

Published on: February 28, 2024
aishwarya
---Advertisement---

ரஜினியின் மூத்த மகள் ஐஸ்வர்யா. நடிகர் தனுஷை காதலித்து திருமணம் செய்து கொண்டு இரண்டு மகன்களுக்கு தாயானார். சினிமா இயக்குவதில் ஆர்வம் கொண்ட அவர் செல்வராகவனிடம் சில படங்களில் உதவி இயக்குனராக வேலை செய்தார். அதன்பின் கணவர் தனுஷையே வைத்து 3 என்கிற படத்தை இயக்கினார்.

அந்த படம் சரியாக போகவில்லை. சில வருடங்கள் கழித்து கவுதம் கார்த்திக்கை வைத்து ‘வை ராஜா வை’ என்கிற படத்தை இயக்கினார். கிரிக்கெட் சூதாட்டம் தொடர்பான அந்த படம் ரசிகர்களை ஈர்க்கவில்லை. எனவே, படங்களை இயக்குவதை நிறுத்தினார். அதன்பின் பல வருடங்கள் கழித்து மீண்டும் ‘லால் சலாம்’ படத்தை இயக்கினார்.

இதையும் படிங்க: டைட்டிலில் இப்படி ஒரு சிக்கலா? அலட்சியப்படுத்திய பாலா.. இனிமே ‘வணங்கான்’ இல்லயாம்

லைக்கா நிறுவனம் தயாரிப்பில் வெளிவந்த இந்த படத்தில் விஷ்ணு விஷால், விக்ராந்த் ஆகியோர் முக்கிய வேடத்தில் நடிக்க ஐஸ்வர்யாவின் அப்பாவும் நடிகருமான ரஜினிகாந்தும் நடித்திருந்தார். இவரை முன்னிறுத்தியே லால் சலாம் படம் விளம்பரம் செய்யப்பட்டது. படத்தின் புகைப்படங்கள் மற்றும் டிரெய்லர் வீடியோக்களும் வரவேற்பை பெற்றது.

ஆனால், தியேட்டரில் வெளியான இந்த படம் ரசிகர்களிடம் வரவேற்பை பெறவில்லை. ரஜினியின் ஜெயிலர் படம் மெகா வெற்றி பெற்ற நிலையில் லால் சலாம் படம் படுதோல்வி அடைந்தது. இந்த படத்திற்கு லைக்கா தரப்பில் தேவையான புரமோஷனை செய்யவில்லை என ஐஸ்வர்யா கூறினார்.

இதையும் படிங்க: டைட்டிலில் இப்படி ஒரு சிக்கலா? அலட்சியப்படுத்திய பாலா.. இனிமே ‘வணங்கான்’ இல்லயாம்

லால் சலாம் படத்தின் தோல்வி ஐஸ்வர்யாவை அப்செட் ஆக்கியிருக்கிறது. ஆனாலும், தனது அடுத்தபட வேலையை துவங்கிவிட்டார். நடிகர் சித்தார்த்தை சந்தித்து ஒரு கதையை சொல்லி இருக்கிறார். கதை நன்றாக இருக்கிறது. ஆனாலும், முழுக்கதையையும் தயார் செய்துவிட்டு என்னிடம் கொடுங்கள். பிடித்திருந்தால் நடிக்கிறேன் என சித்தார்த் சொல்லிவிட்டாராம்.

siddharth

எனவே, பைண்டிங் ஸ்கிரிப்ட்-ஐ தயார் செய்யும் வேலையில் ஐஸ்வர்யா இறங்கியிருக்கிறாராம். அவர் இயக்கிய மூன்று படங்களும் தோல்வி அடைந்துள்ள நிலையில் எப்படியாவது அடுத்த படத்தில் ஹிட் கொடுக்க வேண்டும் என்பதில் ஐஸ்வரயா உறுதியாக இருக்கிறாராம்.

சிவா

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.