Cinema News
எவ்வளவோ படம் கைவிட்டு போச்சு.. இந்த ரெண்டு படத்துல மட்டும் நடிச்சிருந்தா? மாஸை லாஸ் செய்த அஜித்
Actor Ajith: தனக்கு எந்தப் பட்டமும் வேண்டாம். எந்த ரசிகர் மன்றமும் வேண்டாம் என ஒரு தனி டிராக்கில் சென்று கொண்டிருக்கும் நடிகராக அஜித் காணப்படுகிறார். இன்று தமிழ் சினிமாவில் ஒரு உச்சம் தொட்ட நடிகராக இருந்தாலும் மற்ற நடிகர்களுடன் ஒப்பிடும் போது அவர் தனியாகவே காணப்படுகிறார். இதுவரைக்கும் அஜித் ஏன் இப்படி இருக்கிறார் என்ற கேள்விதான் அனைவர் மத்தியிலும் இருந்து வருகிறது.
இருந்தாலும் அவருடைய கெரியரில் ஏராளமான வெற்றி தோல்விகளை பார்த்து வந்தாலும் இந்த படத்தை ஏன் தவறவிட்டீர்கள் தல என ரசிகர்கள் இன்று வரை வேதனைப்படும் படங்களாக இரண்டு திரைப்படங்கள் இருக்கின்றன. எத்தனையோ பல நல்ல படங்களை தவறவிட்டிருக்கிறார் அஜித். ஆனால் இதை போய் மிஸ் பண்ணியிருக்கிறீர்களே என்று சொல்லும் அளவுக்கு இருக்கும் அந்த இரண்டு திரைப்படங்களை பற்றித்தான் பார்க்க இருக்கிறோம்.
இதையும் படிங்க: ஆனந்த் அம்பானி திருமண விழாவுக்கு ஜம்முன்னு ரெடியான ரஜினி குடும்பம்!.. வைரலாகும் போட்டோவை பாருங்க!..
பாலா இயக்கத்தில் நந்தா, நான் கடவுள் போன்ற படங்களில் முதலில் நடிக்க இருந்தது அஜித்தான் என அனைவருக்கும் தெரியும். அதில் நடந்த பிரச்சினை என்னவென்றும் தெரிந்திருக்கும். சரி அந்தப் படங்களைத்தான் தவறவிட்டீர்கள். கஜினி பட வாய்ப்பை ஏன் தவறவிட்டீர்கள் என இன்று வரை ரசிகர்கள் பெரும் வருத்தத்தில் இருக்கிறார்கள். சூர்யாவுக்கு பெரிய டர்னிங் பாயிண்டாக இருந்த படம் கஜினி.
அதில் முதலில் நடிக்க இருந்தது அஜித். அந்தப் படத்தில் மட்டும் அஜித் நடித்திருந்தால் இன்னும் அவருடைய மார்கெட் வேற லெவலில் போயிருக்கும். அதே போல் ஜெமினி படத்திலும் முதலில் நடிக்க இருந்தது அஜித்தான். சரண் இயக்கத்தில் அஜித் நடித்த படங்கள் அனைத்தும் ரசிகர்கள் மத்தியில் பெரும் ஹிட். அதே போல் ஏறுமுகம் என்ற தலைப்பில் சரண் ஒரு கதையை அஜித்திடம் சொல்லியிருக்கிறார்.
இதையும் படிங்க: 15 வருஷம் உழைச்சிருக்கேன்!.. எல்லா அரசியல்வாதியும் எனக்கு தோஸ்த்து.. ஆர்.கே. சுரேஷ் ஓப்பன் டாக்!..
அஜித்துக்கும் பிடித்துவிட்டது. ஆனால் அந்த கதையை டெவலெப் செய்வதற்கு சரண் கொஞ்சம் நாள்கள் எடுத்துக் கொண்டதால் அஜித் அந்தப் படத்தில் இருந்து விலகியதாக தெரிகிறது. அதன் பிறகே ஜெமினி என அந்தப் படத்திற்கு பெயர் மாற்றப்பட்டு விக்ரம் நடித்திருக்கிறார். விக்ரம் கெரியரிலும் ஜெமினி திரைப்படம் ஒரு பெரும் திருப்பு முனை படமாக அமைந்தது.